fbpx
Homeபிற செய்திகள்ராஜம்மாள் தேவதாஸ் நினைவுச் சொற்பொழிவு

ராஜம்மாள் தேவதாஸ் நினைவுச் சொற்பொழிவு

அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக அறங்காவலரும், வேந்தருமான முனைவர் இராஜம்மாள் பா.தேவதாஸின் இருபதாம் ஆண்டு நினைவுச் சொற்பொழிவு வளாகத்தில் நடந்தது.

இசைத்துறை மாணவிகள் இறை வணக்கம் பாடினர். இந்நிறுவனத்தின் புல முதன்மையர் முனைவர் ந.வாசுகி வரவேற்றார். ஸ்ரீஅவினாசிலிங்கம் கல்வி அறக் கட்டளை நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் முனைவர் தி.ச.க.மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கி பேசியதாவது:

பாரதியார் வாக்கிற்கு ஏற்ப, தமது வாழ்வை வாழ்ந்து, வருங்காலத் தலைமுறைக்கும் முன்னுதாரணப் பெண்மணியாய் வாழ வழிகாட்டியவர் இராஜம்மாள் தேவதாஸ்.

அய்யா உருவான மண்ணில், அவர் இட்ட கல்வி விதைக்கு, உரமிட்டு உயர்த்திய உழைப்பாளர். இங்கு கல்வி பயின்ற பல பெண்கள் இன்று உலகெங்கும் பல்வேறு துறைகளில், உயர் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுடைய உயர்கல்விக்கு அடித்தளமிட்ட மங்கையாக அவர் திகழ்ந்தார் என்றார்.

இந்நிறுவனத்தின் வேந்தர் பேராசிரியர் ச.ப. தியாகராஜன் பேசும்போது, புதுமைப் பெண்ணாக நின்று சத்துணவுத் துறையில் பெரும் புரட்சி செய்தவர் என்று புகழ்ந் தார்.

அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர்கல்வி நிறுவனத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் பிரேமாவதி விஜயன் பேசும்போது, இராஜம்மாள் தேவதாஸ் கடும் உழைப்பாளி.

அன்புள்ளத்தோடு செயல்வேகம் கொண்டவர். சிறந்த தெய்வ பக்தியின் காரணமாக அனைத்து சமயங்களையும் போற்றி இறைவழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்தார். சிறந்த தேச பக்தர்.

கதராடை அணிந்து காந்தியத்தைப் போற்றியவர். படிப்பாளியாக இருக்கும் மாணவர்கள் படைப்பாளியாகவும் மாற வேண்டும் என்ற எண்ணம் கொண்டு இருந்தார்.

அவருக்கு நாம் திருப்பிச் செய்யும் அர்ப்பணிப்பு என்பது, நம் கடமையை சரியாக ஆற்ற வேண்டும். பல்கலைக்கழக நலனுக்காக அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என்றார்.

இந்நிறுவனங்களின் துணை நிர்வாக அறங்காவலர் மற்றும் மேனாள் பதிவாளர் முனைவர் கௌரி ராமகிருஷ்ணன், துணைவேந்தர் முனைவர் வை.பாரதி ஹரிசங்கர் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். பதிவாளர் முனைவர் சு.கௌ சல்யா நன்றி கூறினார்.

வணிகவியல் மற்றும் மேலாண்மையியல் துறை புல முதன்மையர் மற்றும் பேராசிரியர் முனைவர் பி.சித்ராமணி, வணிகவியல் துறைப் பேராசிரியர் முனை வர் கே.கன்னியம்மாள் ஆகியோர் விழா வை ஒருங்கிணைத்து நடத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img