திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் மங்கலம் புதூர் நியாயவிலைக்கடையில் 653 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா பாதிப்பு நிவாரண உதவித்தொகை 2வது தவணையாக ரூ.2000 மற்றும் 14 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பினை தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி வழங்கினார்.
அருகில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ராஜ்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ் கோட்டாட்சியர் வெற்றிவேல், துரிஞ்சாபுரம் ஒன்றிய செயலாளர் அண்ணாமலை ஆகியோர் உள்ளனர்.