உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான காக்னிசன்ட், 8.5 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 60 கோடி) கொரோனா நிவாரண நிதியில் 6,50,000 க்கும் மேற்பட்ட அசோசியேட்டுகள், அவர்களின் குடும்பங்கள், சப்போர்ட் டீம்கள் முதலியோருக்கு தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது,
மேலும் 1000 ஆக்ஸிஜன் படுக்கைகள், வெண்ட்டிலேட்டர்கள் மற்றும் தடுப்பூசிகள் உட்பட மோசமான பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உயிர் காக்கும் உபகரணங்களை தொடர்ந்து வழங்குவதற்காக ஏற்பாட்டிலும் இறங்கி உள்ளது.
“இந்த மனித சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை சமாளிக்க நாட்டிற்கு உதவுவதற்கு எங்களிடம் இருக்கும் அனைத்து வளங்களையும் பயன்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இந்தியா முழுவதும் உள்ள உயர்மட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுடன் நாங்கள் கூட்டு சேர்ந்து, இருக்கிறோம்.
எங்கள் அறக்கட்டளை மற்றும் யுனிசெப் ஆகியவற்றிற்கான எங்கள் அவசரகால நிதிமூலம், தடுப்பூசிகள் உட்பட பாதிப்புக்குள்ளாகக்கூடிய மற்றும் மாற்றுத் திறனாளி சமூகங்களுக்கான உயிர்காக்கும் மருத்துவ வசதியை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம்“ என்று காக்னிசன்ட் இந்தியாவின் செயல் துணைத் தலைவரும் தலைவருமான ராஜேஷ் நம்பியார் அவர்கள் கூறியுள்ளார்.