fbpx
Homeதலையங்கம்லட்சம் பேருக்கு வேலை வழங்கி ஸ்டாலின் சாதனை!

லட்சம் பேருக்கு வேலை வழங்கி ஸ்டாலின் சாதனை!

திமுகவின் கடந்த 15 மாதகால ஆட்சியில் தமிழகம் முழுவதும் உள்ள 65 பெரிய கல்லூரிகளில் 882 வேலைவாய்ப்பு முகாம்கள் இதுவரையில் நடைபெற்றுள்ளன. இதுதவிர, தனியாக 817 வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டுள்ளன.

இதுவரை 15,691 நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்களில் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். அதில் 99,989 பேருக்குப் பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுவிட்டன.

அதன் அடுத்தகட்ட பாய்ச்சலாக அண்மையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரியில் தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை சார்பில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு 1 லட்சமாவது வேலைவாய்ப்பு கடிதத்தை வழங்கி அசத்தியுள்ளார்.

மேலும், பள்ளிக்கல்வித்துறையில் பணிக்காலத்திலேயே இயற்கை எய்திய 269 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதேபோல பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் ஆகிய பணியிடங்களுக்கு 2,849 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் நேரடியாக முதலமைச்சரே ஆணைகளை வழங்கினார். இப்படி பல்வேறு துறைகளிலும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஒருபக்கம் தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பை உண்டாக்கித் தருவதுடன் அரசு சார்ந்த வேலைக்கான பணி ஆணைகளை வழங்கும் நடவடிக்கைகளிலும் திமுக அரசு சமஅளவில் தீவிரம் காட்டி வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் அரசு வேலைக்காகப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 63 லட்சமாக இருந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 73 லட்சமாக உயர்ந்துள்ளது.

ஏறக்குறைய இந்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேர் வேலைக்காக பதிவு செய்ய முன்வந்துள்ளனர். இதன்மூலம் இளைஞர்களிடையே அரசுப் பணியின் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளதை புரிந்து கொள்ள முடிகிறது.

இத்துடன் மட்டும் நிற்காமல், வேலைவாய்ப்பில் நான்கில் 3 பங்குக்கான வேலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்றும் வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 40 சதவீத முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுத் துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று ஏற்கனவே அறிவித்தபடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த இலக்கை நோக்கி பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

திமுக அரசு ஆட்சிக்கு வந்து இதுவரை 3,327 நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் 78 சதவீத அறிவிப்புகள் முழுமையாக செயல்வடிவம் பெற்றுள்ளன. அதாவது, 2,607 அறிவிப்புகளுக்கு அரசாணையே வெளியிடப்பட்டுவிட்டது.

இவற்றில் 791 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டு, நடைமுறைக்கு வந்துவிட்டன.எத்தனை இடையூறுகள் ஏற்பட்டாலும், ஏற்படுத்தினாலும் அதனை யெல்லாம் தவிடுபொடியாக்கியபடி முதல்வர் மு.க.ஸ்டாலினின் சாதனைகள் தொடருகிறது; தொடரட்டும்!

படிக்க வேண்டும்

spot_img