fbpx
Homeபிற செய்திகள்வடபழநி போர்டிஸ் மருத்துவமனையில் ஈரல் - கணையம் - பித்தநீர், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை...

வடபழநி போர்டிஸ் மருத்துவமனையில் ஈரல் – கணையம் – பித்தநீர், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மையம்

முன்னணி தொடர் மருத்து வமனையான ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் தனது 17+ ஆண்டுகள் பாரம்பரிய கல்லீரல் பாதுகாப்பு மருத்துவ அனுபவத்தை, அதி நவீன ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட் ‘ஈரல் – கணையம் – பித்தநீர், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மையம்’ தொடங்கியது.

தெற்கு ஆசியாவின் பிரபல கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் விவேக் விஜ் இம்மையத்தைத் தொடங்கி வைத்து பேசியதாவது:

உலகெங்கும் நடைபெறும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை இரண்டாம் இடம் வகிக்கிறது.

இந்தியாவைப் பொறுத் தவரை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒவ்வொரு ஆண்டும் 1500- /2000 என்ற கணக்கில் கடந்த பத்தாண்டுகளில் அபரிமிதமாக வளர்ந்துள்ளது.

இவற்றுள் 10% குழந்தைகளுக்கானது. தெற்கு மற்றும் தென்-கிழக்கு ஆசியாவில் இந்தியா இப்போது முக்கியமான பிராந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மையமாக விளங்குகிறது.

25000க்கும் அதிகமானோர் ஆரோக்கிய கல்லீர லுக்காகக் காத்திருந்தாலும், ஒரு சில ஆயிரம் நோயாளிகளுக்கு மட்டுமே இணக்கமான உடலுறுப்பு கிடைக்கிறது. உடலுறுப்பு தானம் செய்வோர் அதிக எண்ணிக்கையில் தேவைப்படுவதால், பொது மக்களிடையே உடலுறுப்பு தானம் செய்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முழு உறுப்பு பெரும்பாலும் தேவைப்படும் என்றாலும், பகுதி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளும் இந்தியாவில் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

ஆரோக்கியக் கல்லீரலின் 50% மட்டுமே பயன்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்கும் உறுப்பு தானம் தந்தவர்களிடமிருந்தே 80%க்கும் அதிகமான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன’ என்றார்.

சென்னை வடபழநி ஃபோர்டிஸ் மருத் துவமனை பிராந்திய இயக்குனர், எஸ்பியூ தலைவர் டாக்டர் சஞ்சய் பாண்டே பேசுகையில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவு தொடக்கம் மூலம் கல்லீரல் நோயாளிகளுக்குக் குறைந்த செலவில், எளிதில் அணுகத்தக்க, உயர்தர சிகிச்சை வழங்கும் எங்கள் முனைவுகள் தொடரும் என்றார். டாக்டர் புனீத் தர்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img