fbpx
Homeதலையங்கம்வரவேற்கத்தக்க வரிவிலக்கு

வரவேற்கத்தக்க வரிவிலக்கு

வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் நிவாரண பொருட்களுக்கு எஸ்.ஜி.எஸ்.டி வரிவிலக்கு அளித்திருப்பதற்கு தமிழக அரசுக்கு பொதுமக்களும், அரசியல் கட்சித்தலைவர்களும் வரவேற்பு அளித்து பாராட்டியுள்ளனர்.

கொரோனா காலத்தில் இது நல்ல முயற்சி என்றும் கூறியுள்ளனர்.
மத்திய அரசின் உத்தரவை அமுல்படுத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங் களுக்கு சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக் கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து தமிழகத் திற்கு கொரோனா தொடர்பான நிவாரணப் பொருட் களையும் தொகைகளையும் அனுப்பி வருகின்றனர்.

இதனை ஒழுங்குபடுத்தி அதற்கான வரிவிலக்கு கொடுக்கும் போது வெளிநாடுகளில் இருப்பவர்கள் நிதி உதவி, பொருளுதவி செய்வதற்கு வசதியாக இருக்கும் என்ற அடிப்படையில் வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு நன்கொடை யாக பெறப்படும் கொரோனா தொடர்பான நிவாரணப் பொருட்களுக்கு எஸ்ஜிஎஸ்டி என்று அழைக்கக்கூடிய வரி விலக்கானது அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த வரிவிலக்கு பாராட்டி வரவேற்கத்தக்கது. தமிழக அரசின் விரைந்து செயல்பட்ட இந்த உத்தரவு அனைவராலும் பாராட்டப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து நன்கொடை அளிப்பவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img