fbpx
Homeதலையங்கம்வருமான வரித்துறை துணை கமிஷனர் கைது! சபாஷ்!!

வருமான வரித்துறை துணை கமிஷனர் கைது! சபாஷ்!!

ரூ.2.5 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை துணை கமிஷனர் கையும் களவுமாக சிபிஐ அதிகாரிகளிடம் கோவையில் பிடிபட்டார். அவர் உடனே கைது செய்யப்பட்டார்.

கோவை ஆவாரம்பாளையம் பாலசுந்தரம் வீதியை சேர்ந்தவர் பாலதண்டபாணி. டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 2013ம் ஆண்டு ஆலாந்துறையில் உள்ள தனது 60 ஏக்கர் நிலத்தை 10 கோடி ரூபாய்க்கு தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு விற்பனை செய்தார்.

இது தொடர்பாக கோவை மண்டல வருமான வரித்துறை அதிகாரிகள் 2017ல் பாலதண்டபாணியை விசாரணைக்கு அழைத்தனர். அதில் அரசின் வழிகாட்டி மதிப்பீடு செய்ததில் நில விற்பனையோ, நிலப்பதிவோ மேற்கொள்ளப்படவில்லை. ரொக்கமாக பெற்ற தொகைக்கு வருமான வரி செலுத்த வேண்டும் எனக்கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ள பாலதண்டபாணிக்கு அழைப்பை வருமானவரித்துறை அதிகாரிகள் அனுப்பியுள்ளனர்.

இரண்டு மூன்று சிட்டிங் நடந்த விசாரணைக்கு பின் தனக்கு 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் அந்த கோப்புகளை நிறைவு செய்வதாக துணை கமிஷனர் டேனியல்ராஜ் கூறியுள்ளார். தொகையை குறைத்துக் கொள்ள பாலதண்டபாணி கேட்டபோது குறைந்தபட்சம் 2.5 லட்சம் ரூபாய் கண்டிப்பாக தேவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பாலதண்டபாணி கோவை சிபிஐ இன்ஸ்பெக்டர் பாலாஜியிடம் புகார் தெரிவித்தார். நேற்று முன்தினம் துணை கமிஷனர் டேனியல் ராஜை பாலதண்டபாணி சந்தித்து ரசாயனம் தடவப்பட்ட 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2லட்சம் ரூபாய்க்கு காசோலையை வழங்கினார்.

அப்போது மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள் டேனியல் ராஜை கையும் களவுமாக பிடித்தனர். அதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
நேற்று நெஞ்சுவலிப்பதாக டேனியல் ராஜ் கூறியதால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்கு பின் கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி கோவிந்தராஜ் டேனியல் ராஜை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். வருமான வரித்துறை துணை கமிஷனரையே தைரியமாக கைது செய்த அதிகாரிகளை பாராட்டுகிறோம். அதிலும் டேனியல் ராஜின் ஆடிட்டரையும் கைது செய்திருப்பது மெச்சத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img