fbpx
Homeபிற செய்திகள்வால்பாறை நகராட்சி ஆணையராக சுரேஷ்குமார் பொறுப்பேற்றார்

வால்பாறை நகராட்சி ஆணையராக சுரேஷ்குமார் பொறுப்பேற்றார்

வால்பாறை நகராட்சி ஆணையாளராக பணி யாற்றி வந்தவர் பவுன்ராஜ். இவர் மீது துறை ரீதியான விசாரணை நடந்து வருவதால் ஆணையாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் கூடுதல் பொறுப்பை கவனித்து வந்தார்.


இந்த நிலையில் மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த சுரேஷ்குமார் வால்பாறை நகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு நகராட்சி மேலாளர் நஞ்சுண்டன், பொறியாளர் வெங்கடாச லம், துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் அலுவலர்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img