fbpx
Homeபிற செய்திகள்விருதுநகர் செய்தியாளர்கள் பயணத்தின்போது காரியாபட்டி பகுதி வளர்ச்சிப் பணிகளை கலெக்டர் தலைமையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்...

விருதுநகர் செய்தியாளர்கள் பயணத்தின்போது காரியாபட்டி பகுதி வளர்ச்சிப் பணிகளை கலெக்டர் தலைமையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/மாற்றுத்திறனாளி நலத்துறைச் செயலர் ஆனந்தகுமார் செய்தியா ளர்கள் பயணத்தின் போது பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் தோணுகால் அரசு தொடக்கப்பள்ளியில் பயின்று வரும் பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ், வழங்கப்பட்டு வரும் காலை உணவின் தரம் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தனர். பள்ளி ஆசிரியர்களிடம் மாணவர்களின் வருகைப் பதிவு, கல்வி கற்பிக்கும் முறை குறித்து கேட்டறிந்தும், சமையலறை கூடத்திற்கு சென்று உணவு சுகாதாரமாகவும், சுத்தமாகவும் சமைக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.

மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், ஜோகில்பட்டி கிராமத்தில் பயன்பெறும் பயனாளிகளின் இல்லங்களுக்கு சென்று இத்திட்டத்தின் பயன்கள், மருத்துவர் களின் வருகை, சிகிச்சை முறை, வழங்கப்படும் மருந்துகள் குறித்தும் கேட்டறிந்து பயனாளிகளுக்கு மருந்து பெட்டகத்தை வழங்கினர்.

இரும்பு பெண்மணி திட்டத் தின் கீழ், கர்ப்பிணிகளின் இரும் புச்சத்து குறைபாட்டை சரி செய்ய இரும்புச் சத்து மற்றும் ஊட்டச்சத்துமிக்க பொருட்கள் அடங்கிய தொகுப்பினை பயனாளிகளுக்கு வழங்கினர்.
காரியாபட்டி ஊராட்சி சுரபி உண்டு, உறைவிடப்பள்ளியில் பயிலும் நரிக்குறவர் இன மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று, மாணவர்கள் மின்னணு தொலைக்காட்சி மூலம் கல்வி கற்பதை ஊக்கப்படுத்தும் வகையில், அந்த பள்ளிக்கு மின் னணு தொலைக்காட்சி (ED TV)யினை வழங்கினர். அங்கு பயிலும் 50 மாணவர்களுக்கு இனிப்புகள், புத்தாடைகள் வழங்கி அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

வளையங்குளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் பாரத பிரதமரின் சிறு, குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், ரூ.10 இலட்சம் 35 சதவிகிதம் மானியத்தில் பெறப்பட்ட கடனுதவி மூலம் செயல்பட்டு  வரும் மோனா சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருட்கள் தயாரிக்கும் நிலையத்தில், சிறுதானிய மற்றும் கேக் வகைகள் தயாரிக்கும் முறைகள், சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து, நல்ல தரமான முறையில் தயாரித்து அதிக அள வில் சந்தைப்படுத்தி லாபம் ஈட்டுவதற்கும், பெரிய தொழில் முனைவோர் ஆவதற்கும் உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/மாற்றுத்திறனாளி நலத்துறை செயலர் ஆனந்தகுமார், ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி வழங்கினர்.

செய்தியாளர்கள் பயணத்தின் போது, திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு) திலகவதி, திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) தெய்வேந்திரன், வேளாண்மை இணை இயக்குநர் உத்தண்ட ராமன், துணை ஆட்சியர் (பயிற்சி) ஷாலினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சங்கர் எஸ்.நாராயணன், முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி, செயற்பொறியாளர் சக்தி முருகன், கோட்டாட்சியர்கள் கல்யாண குமார், அனிதா, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img