fbpx
Homeபிற செய்திகள்விருதுநகர் மாவட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை 7 மாதத்திற்குள் 100 இலக்கு பூர்த்தி

விருதுநகர் மாவட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை 7 மாதத்திற்குள் 100 இலக்கு பூர்த்தி

விருதுநகர் மாவட்டத்தில், ‘உதயம்’ திட்டத்தில், 100 மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது 7 மாதத்திற்குள் முதற்கட்டமாக 100 கழிப்பறைகள் கட்டப்பட்டு பயனாளியிடம் ஒப்படைக்கப்பட்டு இலக்கு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக அறிவிக்கும் திட்டங்களின் மூலம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, அவர்களது வாழ்வில் புது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தில் உயர்ந்த நிலையையும், சமூக பாதுகாப்பையும் பெற்று வாழ்ந்து வருகிறார்கள்.

மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு, அவர்கள் முன்னேற்றத்திற்கு தனியாக துறையை உருவாக்கி, நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

சேவை புரிந்தோருக்கு விருது
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசப் பேருந்து பயணச் சலுகை, ரயிலில் பயணச் சலுகை, இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மாற்றுத்திறனாளி களுக்கான உதவி உபகரணங்கள், திருமண நிதி உதவி, கல்வி உதவி தொகை, பராமரிப்பு உதவித் தொகை, சுய தொழில் புரிவதற்கான கடனுதவி, வேலையில் முன்னுரிமை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், மாற்றுத்திறனா ளிகளின் நலனுக்காக சிறப்பான முறையில் சேவை புரிந்தவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மாநில அளவிலான விருதுகளையும் முதல்வர் வழிகாட்டலில் தமிழக அரசு வழங்கி வருகிறது.

தமிழகம் முன்மாதிரி
மாற்றுத் திறனாளி களுக்கு சிறப்புத் திட்டங்களை அறிவித்து அதை செயல்ப டுத்துவதில் இந்தியாவுக்கே தமிழகம் முன்மாதிரியாக திகழ்கிறது.

அதனை நிரூபிக்கும் விதமாக மாற்றுத் திறனா ளிகளுக்குச் சிறப்பான சேவை வழங்கி யமைக்காக, இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் மாநிலமாக தேர்ந்தெ டுக்கப்பட்டு, குடியரசுத் தலைவரால், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான 03.12.2021 அன்று விருதும் வழங்கப் பட்டது.

சிறப்பு அம்சங்கள்
இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தக் கூடிய வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கென்று தனியாக வடிவமைக்கப்பட்ட (Special Toilets கழிப்பறைகள் கட்டப்பட்டு மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தக் கூடிய வகையில், சக்கர நாற்காலியில் அமர்ந்து கழிப்பறைக்குள்ளே செல்ல ஏதுவாக சாய்தள வசதி, சௌகர்யமான முறையில் அமர மேற்கத்திய வடிவமைப்பிலான கழிப்பறை Western Toilet) அருகிலேயே கம்பி வடிவிலான கைப்பிடிகள் (hand support) மற்றும் அதிக இடவசதி ஆகியவற்றை உள்ளடக்கிய அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் 100 மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது 7 மாதத்திற்குள் முதற்கட்டமாக 100 கழிப்பறைகள் கட்டப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டு இலக்கு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

இந்த கழிப்பறைகளை மாற்றுத்திறனாளிகள் எதிர்பார்க்காமலேயே அவர்களுடைய அடிப்படை தேவையை பூர்த்தி செய்த மாவட்ட ஆட்சியருக்கு தங்களுடைய உணர்வு பூர்மான நன்றிகளை பயனடைந்த மாற்றுத்திறனாளிகள் தெரிவித்து வருகின்றனர்.

அணுகலாம்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை மூலமாக மிகவும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி பள்ளி மாணவ, மாணவியர்கள் பட்டியல்கள் பெறப்பட்டு, அவர்களுக்கும் இந்த தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்டித்தர மாவட்ட நிர்வாகம் மூலம் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

விருதுநகர் மாவட்டத்தில் தனிநபர் இல்ல கழிப்பறை கட்டிடம் தேவைப்படும், மிகவும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம்.

முதல்வரின் சீரிய வழி காட்டுதலில் செயல்படக்கூடிய மாவட்ட ஆட்சியர்,
காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது
என்ற வள்ளுவரின் கூற்றுக்கிணங்க, மிக மிக அவசியமான நேரத்தில் மற்றவர்களின் தேவைகளை அறிந்து செய்யப்படும் உதவி இந்த உலகை விட மிகப் பெரியது.

இந்த நோக்கத்தில், மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் ஒளியேற்றும் வகையில், விருதுநகர் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, உதயம் என்ற சீரிய திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகிறார்.

உதயம் திட்டம்
இந்த ‘உதயம்’ திட்டம் மாவட்ட ஆட்சியர் சிந்தனையில் உதித்த ஒரு முத்தான திட்டம். இந்தியாவிலேயே வேறும் எங்கும் இல்லாத வகையில், தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக, சமூக பொறுப்பு நிதியின் (CSR Fund) கீழ் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை அறிந்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்.

மாற்றுத்திறனாளிகள் பிறர் உதவியை எதிர்பார்க்காமல், சுயமரியாதையுடனும், கண்ணியத்துடனும் தாங்களே எளிதாக பயன்படுத்தக் கூடிய வகையில், குறிப்பாக மாற்றுத்திறனாளி பெண்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டும், சிரமத்தினை தவிர்க்கும் பொருட்டும், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்டி கொடுப்பது தான் உதயம் திட்டம்.

‘பிரத்யேக வடிவமைப்பு ஏதுவாக இடவசதி’
‘உதயம்’ திட்டத்தின் கீழ் பயனடைந்த ஜெயராமன் என்பவர் தெரிவித்ததாவது:
நான் சிவகாசி ஊராட்சி ஒன்றியம், ஆனையூர் ஊராட்சி சமத்துவபுரத்தில் வாழ்ந்து வருகிறேன். எனது இடது கால் செயலிழந்து உள்ளது.

இந்த உதயம் திட்டத்தின் கீழ் எனக்கு நவீன கழிப்பறை கட்டிடம் கட்டப்பட்டு அளிக்கப் பட்டுள்ளது. பிரத்யேகமாக வடிவமைக் கப்பட் (Special Toilets)கழிப்பறைக்குள்ளே செல்ல ஏதுவாக இடவசதியுடன் கூடிய மேற்கத்திய வடிவமைப் பிலான கழிப்பறை Western Toiletஅருகிலேயே கம்பி வடிவிலான கைப்பிடிகள் மற்றும் அதிக இடவசதி ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த நவீன கழிப்பறை மூலம் மற்றொருவரின் துணை இல்லாமல் சென்று வர முடிகிறது.

என்னை போன்ற மாற்றுத்திறன் உள்ளவர்களின் நலனில் அக்கறை கொண்டு, நாங்கள் எதிர்பார்க்காமலேயே எங்களுடைய அடிப்படை தேவையை பூர்த்தி செய்த முதல்வர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி என்றார்.
‘சுயமாக இயங்கவும் பாதுகாப்பாகவும் உணர்கிறேன்’

‘உதயம்’ திட்டத்தின் கீழ் பயனடைந்த மாரீஸ்வரி என்பவர் தெரிவித்ததாவது:
நான் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பாலவநத்தம் கிராமத்தில் வசித்து வருகிறேன். எனக்கு இரண்டு கால்களும் செயலிழந்து உள்ளது.

நான் இயற்கை உபாதைகள் மேற்கொள்ள கழிப்பறை செல்வதற்கு மற்றொருவரின் உதவியை நாட வேண்டியிருந்தது. இரு கால்களும் செயலிழந்த என்னால், சாதாரண முறையிலான கழிப்பறையை பயன்படுத்துவது மிகவும் சிரமமாக இருந்தது.

குறிப்பாக நான் பெண் மாற்றுத்திறனாளி என்பதால் எனக்கு ஏற்படும் சிரமங்கள் சொல்லி மாளாது. இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் உதயம் திட்டத்தின் கீழ் எனக்கு நவீன கழிப்பறை கட்டிடம் கட்டப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பிறர் உதவியை எதிர்பார்க்காமல், என்னால் சுயமாக சக்கர நாற்காலி மூலம் எளிதாகவும், பாதுகாப்பாகவும், சிரமமின்றியும் சென்று கழிப்பறையை உபயோகப்படுத்த முடிகிறது.

என்னைப் போன்ற பெண் மாற்றுத்திறனாளிகளின் உள்ளுணர்வை புரிந்து கொண்டு, இந்த நவீன தனிநபர் கழிப்பறையை கட்டி கொடுத்து, எங்களின் சுயமரியாதையையும், கண்ணியத்தையும் பாதுகாக்கும் முதல்வர், மாவட்ட ஆட்சியருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி என தெரிவித்தார்.

வெளியீடு:
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
விருதுநகர் மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img