விருதுநகர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ஜெ.மேகநாதரெட்டி இன்று (வியாழக்கிழமை) பொறுப்பேற்றார்.
சென்னை மாநகராட்சியில் பணிகள் துணை ஆணையாளராக பணிபுரிந்து வந்த ஜெ.மேகநாதரெட்டி, விருதுநகர் மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் தமிழக அரசின் அரசாணைப்படி வியாழக்கிழமை பொறுப்பேற்றார்.
கடந்த 2013 -ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றார். பின்னர் டிசம்பர் – 2015 முதல் பிப்ரவரி – 2018-ஆம் ஆண்டு வரை சேலம் மாவட்டம் மேட்டூரில் சார் ஆட்சியராகவும், பிப்ரவரி 2018 முதல் செப்டம்பர் – 2018-ஆம் ஆண்டு வரை நில நிர்வாகத்துறை இணை ஆணையாளராகவும், செப்டம்பர் – 2018 முதல் மார்ச் – 2020-ஆம் ஆண்டு வரை வணிகவரித்துறை இணை ஆணையாளராகவும், மார்ச் – 2020 முதல் மே – 2021-ஆம் ஆண்டு வரை சென்னை மாநாகராட்சியின் வருவாய் மற்றும் நிதித்துறை துணை ஆணையாளராகவும், செப்டம்பர் – 2020 முதல் மே – 2021-ஆம் ஆண்டு வரை சென்னை மாநாகராட்சி பணிகள் துணை ஆணையாளராகவும் பணியாற்றினார்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.