தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட வுசு சங்கம் மற்றும் மாவட்ட விளையாட்டு வீரர்கள் யூனியன் சார்பில் தேசிய மற்றும் மாநில வுசு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.
மாவட்ட வுசு சங்க தலைமை பயிற்சியாளர் ஜாக்கி சங்கர் வரவேற்பும், என்.ஜி.ஒ. காலனி விளை யாட்டு குழும செயலாளர் முருகன் தலைமை வகித்தார். மாவட்ட விளை யாட்டு வீரர்கள் சட்ட ஆலோசகர் பெருமாள் முன்னிலை வகித்தார்.
மாவட்ட வுசு சங்க தலைவர் ஹரிஹரன் தேசிய மற்றும் மாநில அளவிலான வுசு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
மேலும் தடகளப் பயிற்சியாளர் சந்திரசேகரன், யோகா பயிற்சியாளர் ராஜ கோபால், வுசு பயிற்சியாளர் ஜாக்கி சங்கர், குங்பூ பயிற்சியாளர் கணேசன் ஆகியோருக்கு சிறந்த பயிற்சியாளர்களுக்கான விருது வழங்கப்பட்டது.
இவ்விழாவில் பல்வேறு விளையாட்டு களைச் சேர்ந்த வீரர் மற்றும் வீராங் கனைகள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.