ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்படி தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் நேரடியாக குழாய் மூலம் குடிநீர் வினியோகிக்க திட்டமிடப்பட்டு அதற்கு 2021-2022 நிதியாண்டிற்கு ரூ.3691.21 கோடியை மத்திய அரசு மானியமாக வழங்கியுள்ளது. இது வழக்கத்தை விட 4 மடங்கு அதிகமாகும். இந்த நிதியின் முதல் தவணை ரூ.614.35 கோடி தமிழகத்திற்கு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது, பாராட்டுக்கள்.
தமிழகத்தில் உள்ள மொத்தம் 1.26 கோடி வீடுகளில் தற்போது 40,36,571 வீடுகளுக்கு இதுவரை நேரடியாக குழாய் நீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தேசிய ஜல் ஜீவன் மிஷன் திட்டம் தொடங்கப்பட்டபோது தமிழகத்தில் 17.06 சதவீதம் அளவில் 21.65 லட்சம் வீடுகள் மட்டும் நேரடி குழாய் நீர் வினியோக வசதியை பெற்றிருந்தது.
தமிழகத்தில் தற்போது 86.53 லட்சம் குடியிருப்புகள் நேரடி குழாய் நீர் இணைப்பை பெறாமல் உள்ளது. இந்த நிலையில் 2024ம் ஆண்டுக்குள் இத்திட்டத்தை விரைந்து முடிக்கும் வகையில் தமிழக அரசு நடப்பு ஆண்டின் செயல் திட்டத்தை மத்திய அரசு கோரியுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.8436 கோடி உறுதியளிக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய முதலீடு. இதன் மூலம் தமிழக கிராம பகுதிகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஊக்கம் அளிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அனைவர் வீடுகளுக்கும் நேரடியாக குழாய் மூலம் குடிநீர் வழங்கப்போவது மகிழ்ச்சி அறிவிப்பு.