fbpx
Homeபிற செய்திகள்வீட்டு வேலைகளை இருபாலரும் பகிர்ந்து செய்ய ஏரியல் அறிவுறுத்தல்

வீட்டு வேலைகளை இருபாலரும் பகிர்ந்து செய்ய ஏரியல் அறிவுறுத்தல்

முன்னணி லாண்டரி பிராண்டான ஏரியல் சென்னையில் நடத்திய நிகழ்வில், பிரபல தென்னிந்திய நட்சத்திரங்களான சாந்தனு பாக்யராஜ் மற்றும் சிபி புவன சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் வீடுகளில் நிலவும் பாலின சமத்து வமின்மை சங்கிலியை உடைக்க வேண்டியதன் அவசியத்தை எடுத் துரைத்தனர், அதே நேரத்தில் ஆண்கள் அனைவரும் தங்கள் மனைவிகளுடன் வீட்டு வேலைகளை சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் வலியு றுத்தினார்கள்.

ஏரியலின் சமீபத்திய, Share The Load காணொலியில், “ஆண்கள் சுமையை மற்ற ஆண்களுடன் சமமாக பகிர்ந்து கொள்ள முடியும் என்றால், அவர்கள் ஏன் அதை தங்கள் மனைவிகளுடன் செய்யவில்லை?’’ என்னும் விஷயத்தை பிரதிப லிக்கிறது.

ஏரியல் இந்தியா 2015 ஆம் ஆண்டு முதல், தங்கள் விருது பெற்ற இயக்கமான #Share The Load என்னும் பிரச்சாரத்தின் மூலம் வீட்டில் பாலின சமத்துவம் பற்றிய உரையாடல்களை நடத்தி வருகிறது, மேலும் ஆண்களை வீட்டு வேலைகள் செய்வதில் சம பங்கு வகிக்கும்படி வலியுறுத்துகிறது.

பெண்களை நாம் சமமாக பார்க்கும்போது, கண்டிப்பாக #Share The Load சாத்திய மாகும். நடிகர் சாந்தனு பாக்யராஜ் இதுகுறித்துப் பேசுகையில், “ஆண்களாகிய எங்களுக்கு வீட்டு வேலைகளை எப்படி செய்வது என்று தெரியும், ஆனால் பலர் இந்த பொறுப்பை வீட்டில் பகிர்ந்து கொள்வதற்கு வெட்கப்படுகிறார்கள்.

தங்கும் விடுதிகளில் தங்கியிருக்கும்போது அல்லது சகோதரர்க ளுடன் வளரும்போது, மற்ற ஆண்களுடன் வேலைகளைப் பிரித்து மேற்கொள்பவர்கள், மனைவிகளுடன் வேலையைப் பகிர்ந்து கொள்வதை ஏன் வித்தியாசமாகப் பார்க் கிறார்கள் என்று தெரியவில்லை. ” என்றார்.

ஏரியல் ஒரு மாதத்திற்கு முன்பு #Share The Load இன் 5வது எடிசனை அறிமுகப்படுத்தியது. தவிர, அதற்கான பிரத்யேக வீடியோவானது 50 மில்லியனுக்கும் அதிகமான பார்வை களைப் பெற்றுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img