வேதியலுக்கான வேந்திய சங்கத்தின் (Royal Society of Chemistry) அறிஞராக பாரதியார் பல்கலைக்கழகத்தின் நானோ அறிவியல் நுட்ப தலைவர் மற்றும் உள் தர உத்தரவாதக் குழுவின் (IQAC) இயக்குனர் முனைவர் என்.பொன் பாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வேதியலுக்கான வேந்திய சங்கம் என்பது இங்கிலாந்து ஐக்கிய அரசின் உயர் தொழில்சார் சங்கம். வேதியியல் சார் அறிவியல்களை முன்னேற்றுவதே இதன் நோக்கம்.
1980-ம் ஆண்டு இங்கிலாந்து அரசு பட்டயத்துடன் இச்சங்கம் உருவாக்கப்பட்டது.
இதன் தலைமையகம் லண்டனில் உள்ள பிக்காலிடியில் பேர்லிங்டன் மாளிகை யில் அமைந்துள்ளது.
இப்பழம் பெரும் சங் கத்தின் அறிஞராக தேர்ந்தெடுக்கப்படுவது அறிவியல் உலகத்தின் மிக உயரிய மதிப்பு மிக்க நற்சான்றாக கருதப்படுகிறது.
பேராசிரியர் என். பொன்பாண்டியன், தனது கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி அனுபவங் களின் அடிப்படையிலும், இவரின் ஆராய்ச்சி முடிவுகளை பல சர்வதேச மற்றும் தேசிய அறிவியல் சார் ஏடுகளில், புத்தகங்களில், புத்தக அத்தியாயங்களில் வெளியிட்டது.
இவரின் ஆராய்ச்சி பணிகளுக்கு பெற்ற விருதுகள், திட்ட நிதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த மதிப்பு மிக்க சங்கத்தின் அறிஞராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
பேராசிரியர் பொன் பாண்டியன் தனது குறிப் பிடத்தக்க ஆராய்ச்சி பங்களிப்பிற்காக, அமெரிக் காவின் ஸ்டான் போர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களால் ஸ்கோபஸ் (SCOPUS) எனும் மிகப் பெரிய மேற் கொள் தரவுதளத்தால் அனுப்பப்பட்ட தரவுகளின் மூலம் பயன்பாட்டு இயற்பியல் துறையில் உலகின் முதல் 2 சத வீத விஞ்ஞானியாக பட்டியிலிடப்பட்டார்.
கடந்த 20 ஆண்டுகளாக பேரா.பொன் பாண்டியன் நானோ அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் பல திறமையான மற்றும் ஊக்கமளிக்கும் செயல் பாடுகளை வழங்கி உள்ளார்.