fbpx
Homeபிற செய்திகள்வேலூர் நறுவீ மருத்துவமனையில் தசைக்கூட்டு வலிக்கான கருத்தரங்கு

வேலூர் நறுவீ மருத்துவமனையில் தசைக்கூட்டு வலிக்கான கருத்தரங்கு

வேலூர் நறுவீ மருத்து வமனை வலி மருத்துவத் துறை(Department of Pain Medicine) சார்பில் தசைக்கூட்டு வலிக்கான மருத்துவம்(Workshop on Intervention of Musculoskeletal Pain) பற்றிய ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது.

தேசிய அளவில் பல்வேறு மருத்துவ மனைகளைச் சேர்ந்த மயக்க மருந்தியல் நிபுணர்கள், மூட்டு வலி மருத்துவ நிபுணர்கள், வலி நிவாரண மருத்துவ நிபுணர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

நறுவீ மருத்துவமனை மயக்க மருந்தியல் துறை தலைவர் மற்றும் கருத்தரங்கு அமைப்பாளர் டாக்டர் சரவணண் வரவேற்றார்.

மருத்துவமனை தலை வர் ஜி.பி.சம்பத் தலைமை வகித்து பேசினார். கருத்தரங்கின் நோக்கம் பற்றி மருத்துவமனை செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி பேசினார்.

புதுச்சேரி அரசு இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய வலி மருத்துவ நிபுணர் டாக்டர் மதன் பாண்டியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கருத்தரங்கு மலரை வெளியிட்டு பேசினார்.

முழங்கை, மணிக்கட்டு, உடற்கூறியியல், தோள் பட்டை, முழங்கை அல்ட்ரா சவுண்டு, தோள்பட்டை அல்ட்ராசவுண்டு உள்ளி ட்ட பல்வேறு தலை ப்புகளில் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

நறுவீ மருத்துவமனை தலைமை இயக்குதல் அலுவலர் மணிமாறன், பொதுமேலாளர் நிதின் சம்பத், வலி மருத்துவத் துறை தலைவர் மற்றும் கருத்தரங்கு அமைப்பாளர் டாக்டர் ஜெயசுதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img