fbpx
Homeபிற செய்திகள்வேலூர் மாநகராட்சியில் 1600 முன்களப் பணியாளர்களுக்கு மலபார் கோல்டு நிறுவனம் உதவி

வேலூர் மாநகராட்சியில் 1600 முன்களப் பணியாளர்களுக்கு மலபார் கோல்டு நிறுவனம் உதவி

மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் சிஎஸ்ஆர் (கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு) நிகழ்ச்சி வேலூர் மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் கிளை சார்பாக வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் மலபார் கோல்டு சார்பில் 1600 மாநகராட்சி முன்களப் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1000 மதிப்பு வீதம் மொத்தம் ரூ.16 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களை மாநகராட்சி ஆணையாளர் சங்கரன் வழங்கினார்.


இந்த நிகழ்ச்சியில் மலபார் கோல்டு வேலூர் கிளைத் தலைவர் அனீஸ், துணைத் தலைவர் சச்சின், வர்த்தக மேலாளர் சையது ஆகியோர் கலந்து கொண்டனர்.


இவை தவிர மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் தனது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சுகாதாரம், கல்வி, வீட்டு வசதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மகளிரை அதிகார மயமாக்குதல் என சமூக பொறுப்பு திட்டங்களுக்கு செலவு செய்வது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img