fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் தொடங்கியது.

இந்திய சமூக அறிவியல் கவுன்சில் நிதியுதவியுடன், கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பன்னாட்டு வணிகத்துறை சார்பில், `இளம் தலைமுறையினருக்கு தகவல் தொடர்பு கருவிகளைப் பயன்படுத்தி கற்பிக்கும் வகையில், ஆசிரியர்கள் தங்களை வடிவமைத்து தரத்தை மேம்படுத்திக்கொள்ளுதல்’ என்ற தலைப்பில், 2 நாள் தேசிய அளவிலான கருத்தரங்கம் இரு நாட்கள் நடைபெற்றது.

இதன் தொடக்க விழாவிற்கு ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமைவகித்து, குத்துவிளக்கேற்றி கருத்தரங்கைத் தொடங்கிவைத்தார்.
பன்னாட்டு வணிகத்துறைத் தலைவர் முனைவர் ஐ.பர்வீன்பானு வரவேற்றுப் பேசினார். கோவை வருமானவரித் துறை இணைஆணையர் எம். கார்த்திகேயன் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்டு, கருத்தரங்க மலரை வெளியிட்டு பேசினார். அப்போது, ‘பொதுநிர்வாகத்தில் பயிற்சி என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. பயிற்றுநர்களுக்கு பயிற்சி அளிப்பது சிறப்புமிக்கது.

பன்னாட்டு வணிகத்துறை வெளிநாட்டு வர்த்தகம், வருமானவரி, வர்த்தகம் என பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது. இவைகுறித்து ஆழமாக பயிற்சி அளிக்கவேண்டியது அவசியம்’ என்றார். அதை தொடர்ந்துநடைபெற்ற கருத்தரங்கில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பன்னாட்டு வணிகத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ஆர்.சிவராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img