fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில்‘கற்போம் , வழிநடத்துவோம் மன்றம் தொடக்கம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில்‘கற்போம் , வழிநடத்துவோம் மன்றம் தொடக்கம்

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில், “Read to Lead” என்ற கற்போம் வழி நடத்துவோம் மன்றம் தொடக்கவிழா, கல்லூரி கலையரங்கில் நேற்று (ஆக.25) நடைபெற்றது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்து, “ஸிமீணீபீ tஷீ லிமீணீபீ” கிளப்பைத் தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து நாள்தோறும் பத்திரிகைகள் வாசிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மாணவர்கள் பொது அறிவை வளர்த் துக் கொள்வதற்கு பத்திரிக்கைகள், இதழ்கள் எவ்வாறு பங்களிக்கின்றன? என்று விளக்கம் அளிக்கப்பட்டது.நாள்தோறும் மாணவர்கள் பத்திரிக்கைகள் வாசித்து பயன் பெறுவதற்கான வசதிகள் இந்த கிளப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
ஆங்கிலத்துறை மூன்றாமாண்டு மாணவி ÝSQ, கிளப் தலைவராகவும், பி.காம். பி அண்டு ஐ துறை இரண்டாமாண்டு மாணவர் பி.ராகேஷ் செயலராகவும் தேர்ந் தெடுக்கப்பட்டனர்.

பின்னர் 80 மாணவ, மாணவிகள் உறுப்பினர்களாகவும், ‘Read to Lead’ கிளப்பில் இணைத்துக் கொண்டனர்.தொடர்ந்து மாணவர்களின் நாடகம், மௌன நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.ஆங்கிலத்துறைத் தலைவர் முனைவர் ஆர்.கருணாம்பிகை, பி.காம். பி அண்டு ஐ துறைத்தலைவர் முனைவர் டி.பிரபு வெங்கடேஷ் உள்ளிட்டோர்பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img