fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரியில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரியில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பெண்கள் மேம்பாட்டு மையம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் ஆகியவை ஸ்ரீராம கிருஷ்ணா மருத்துவமனையுடன் இணைந்து, மார்பகப் புற்றுநோய் மாதத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி, கல்லூரி கலையரங்கில் நேற்று (அக்.13) நடைபெற்றது. ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினர் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவ இயக்குநர் டாக்டர் பி.குகன் பேசியதாவது:
மார்பகப் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவது என்பதை விட, வருமுன் காப்பதே சிறந்தது.

இதைக் கண்டறிய அதிநவீன தொழில்நுட்பங்கள் வந்து விட்டன. மார்பகப் புற்றுநோயின் பாதிப்பு குறித்து, பெண்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். மாணவிகளாகிய நீங்கள் இதன் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மரபுவழி பாதிப்பு என்பதை விட, நம்முடைய வாழ்வியல் முறையில் மாற்றம், உணவுப் பழக்க வழக்கங்களில் மாற்றம், உடல் ஆரோக் கியம் குறித்து விழிப்புணர்வின்மை போன் றவையெல்லாம் மார்பகப் புற்றுநோய் ஏற்பட காரணமாகின்றன என்றார்.

புற்றுநோய் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.பார்கவி பேசியதாவது: மார்பகப் புற்றுநோய் குறித்து பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டியது அவசியமாகும்.

இது குறித்த போதிய அறிவு எல்லோரும் பெற்றிருக்க வேண்டும். இளம் பெண்கள், நடுத்தர வயது பெண்கள் இதனால் பாதி க்கப்படுகின்றனர். எனவே பெண்கள் அவ்வப்போது பரிசோதனைகளை செய்து கொள்வது நல்லது.

அறிகுறிகள் தென் பட்டால் ஆரம்பக் கட்டத்திலேயே சரிசெய்து விட முடியும். நிறைய தொழில் நுட்பங்கள் வந்துவிட்டன. எளிமையான முறையில் குணப்படுத்த முடியும். இந்நோய் குணப்படுத்தக்கூடியதே என்றாலும், வருமுன் காப்பதே சிறந்தது என்றார்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள்250 பேருக்கு, மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஒலி, ஒளி அடங்கிய ‘பென்டிரைவ்’ வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் எஸ்.பிரகதீஸ்வரன், பெண்கள் மேம்பாட்டு மையத் தலைவர் முனைவர் ஜி.கவிதா ஆகியோர் செய்திருந்தனர்.

பெண்கள் மேம்பாட்டு மைய மாணவத் தலைவி ஆர்.ஆர்த்தி வரவேற்றார்.
மாணவச் செயலர் ஏ.ஸ்ரேயா நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img