fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் இண்டஸ்ட்ரி 4.0 சிறப்பு மையம் துவக்கம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் இண்டஸ்ட்ரி 4.0 சிறப்பு மையம் துவக்கம்

கோவை, வட்ட மலை பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியி யல் கல்லூரியின் ரோ பாட்டிக்ஸ் மற்றும் ஆட் டோமேஷன் துறையானது, பெங்களூரு விப்ரோ பாரி உள்கட்டமைப்பு – வின் ஆட்டோமேஷன் சொல் யூஷன்ஸ் உடன் இணைந்து, ஸ்மார்ட் உற்பத்தி மற்றும் தொழில்துறை 4.0-ல் சிறந்து விளங்கும் மையத்தை கல்லூரி வளாகத்தில் நிறுவியுள்ளது.

இந்த தனித்துவமான வசதியை, பெங்களூருவின் ஆட்டோமேஷன் சொல்யூ ஷன்ஸ், மூத்த துணைத் தலைவர் ஜி.சுந்தரராமன், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர், டி.லட்சுமிநாராயணசுவாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.

கல்லூரி முதல்வர் முனைவர் என்.ஆர்.அல மேலு வரவேற்றார்.
இந்த மையத்தில், கோ போட், மெஷின் விஷன் சிஸ்டம், இண்டஸ்ட்ரியல் ஐஓடி, தானியங்கி வழி காட்டி வாகனங்கள், கோ பட்களின் கட்டுப்பாடு மற்றும் செயல்முறைக்கான மென்பொருள் ஆகியவை உள்ளன.

மேற்கூறிய வசதிகளை கொண்டு, இயந்திரங்கள் மற்றும் பலவடிவங்களை கொண்ட பொருள்களை கையாளுதல், அவற்றின் செயலாக்கம், ஆறு அணுகு முறை அமைப்புடன் கூடிய ரோபோ செயல்முறை கட்டுப்பாடு, பொருள் போக்குவரத்திற்கான தானியங்கி வழிகாட்டி வாகனங்கள் மற்றும் சேர் க்கை உற்பத்திக் கான த்ரீ டி பிரிண்டர் ஆகியவற்றிற் கான அதிநவீன வசதி களை உருவாக்கி பயன் படுத்த ஆய்வகம் நிறுவப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியின் போது, வின் ஆட்டோமேஷனுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.

இந்த மையம், தொழில் துறை 4.0, ஸ்மார்ட் தொழிற்சாலை மற்றும் உற்பத்தி, இயந்திரம் கையாளும் முறை வடிவமைப்பு மற்றும் ரிவெர்ஸ் இன்ஜினியரிங் துறை ஆகியவற்றில் மாணவர்களின் திற¬ மயை எளிதாக்கும்.

இந்த மையத்தை தொழில்து றையினர் ஸ்மார்ட் உற்பத் தியை நோக்கிச் செல்ல பயன்படுத்தலாம். இந்த வசதியில் பயிற்சி பெற்ற மாணவர்கள், வின் ஆட் டோமேஷன் மூலம் இன்டர்ன்ஷிப் மற்றும் வேலை வாய்ப்புகளைப் பெறுவார்கள்.

கல்லூரியின் இண் டஸ்ட்ரி கனெக்ட் ஆலோசகர் எம்.கணேஷ், துறைத்தலைவர் முனை வர் ஏ.முருகராஜன் இந்நிகழ்ச் சியை ஒருங்கிணைத்தனர்.

இதில் துறைத்தலைவர்கள், இயந்திரவியல் மற்றும் ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் ஆகிய துறைகளின் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img