fbpx
Homeபிற செய்திகள்ஹாயரின் புதிய ஓஎல்இடி டிவி அறிமுகம்

ஹாயரின் புதிய ஓஎல்இடி டிவி அறிமுகம்

ஹாயர் நிறுவனம் 4.9 மி.மீ. தடிமனே கொண்ட புதிய அல்ட்ரா ஸ்லிம் ஓஎல்இடி OLED) டிவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

வீட்டு உபயோகப் பொருள், நுகர்வோர் மின்னணு கருவிகளில் உலகின் நம்பர் 1 பிராண்டாக தொடர்ந்து 13 ஆண்டுகளாக முன்னணியில் உள்ளது ஹாயர் நிறுவனம்.

நுகர்வோருக்கு உண்மையான பொழுது போக்கு அனுபவத்தைத் தரும் வகையில், வளைவற்ற மெட்டல் வடிவமைப்பு, துல்லியமான காட்சித் தரம், காட்சிகளில் முழுமையாக ஆழ்ந்து போகக்கூடிய அனுப வத்தைத் தரக்கூடியது.

இது மட்டுமல்லாமல், ஹாயரின் புதிய ஆண்ட்ராய்ட் கொண்ட ஓஎல்இடி டிவி, தொலைவிலிருந்தே குரல் மூலமாகவே இயக்கக்கூடியது. நீங்கள் கைகளால் அதை இயக்க வேண்டிய தேவை ஏற்படாது. போன், டேப்ளெட், லேப்டாப் அல்லது டிவியை நினைத்த மாத்திரத்தில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம்.

இதில் Chromecast பில்ட் இன் இருப்ப தால், ஒருவர் தனக்கு விருப்பமான திரைப்படங் கள், தொடர்கள், ஆப்ஸ், கேம்ஸ் என டிவியிலேயே பலவற்றை பயன்படுத்த முடியும்.

மற்ற எல்இடி டிவிகளில் பார்க்க சாத்தியமில்லாத நள்ளிரவு நேரம், நட்சத்திர ஒளி, செவ்வாய் தரைப்பகுதி போன்ற நிறங்களை ஓஎல்இடி டிவியில் துல்லியமாகப் பார்க்க முடியும் – அத்துடன் மேம்பட்ட காட்சி அனுபவத்தில் நாம் ஆழ்ந்துபோகும் வகையில் அல்ட்ரா வைடு ஆங்கிள் வசதியும் உண்டு.

எல்சிடியைவிட மிகக் குறைந்த நீல ஒளியையே ஓஎல்இடி வெளியிடுகிறது. அதனால் நீண்ட நேரம் பார்க்க உகந்தது.

ஓஎல்இடி-யில் குறைந்த நீல ஒளியையே வெளியிடுவது, மினுமினுப்பதில்லை என்பதால் கண் ஆரோக்கியத்துக்கு நல்லது. ஹாயர் நிறுவனம் சொகுசு பொருள்களுக்கு மாறாக, ஸ்மார்ட் ஹோம் பொருள்களை பயன் பாட்டுக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தி வருகிறது.

ஹாயரின் புதிய ஓஎல்இடி டிவி உள்பட பல்வேறு ஸ்மார்ட் கருவிகள் மூலம் நவீன இந்திய வீடுகளை உருமாற்றும் நோக்கத்துடனும் அனைத்தையும் தொடர்பு படுத்தி வைக்கும் அனுபவத்தையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில் செயல்பட்டுவருகிறது.

புதிய ஹாயர் OLED டிவி65S9UG மாடல் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகளில் கிடைக்கும். இந்த மாடலின் அறிமுக விலை ரூ. 2,39,990.

படிக்க வேண்டும்

spot_img