fbpx
Homeபிற செய்திகள்ஹைட்ராலிக் நலச்சங்கம் வணிக ஆலோசனைக் கூட்டம்

ஹைட்ராலிக் நலச்சங்கம் வணிக ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு ஹைட்ராலிக் மற்றும் எர்த் மூவர்ஸ் ஆப்ரேட்டர்கள் நலச் சங்கம் மற்றும் பிரீத் நிறுவனம் இணைந்து, சேலம் ஜி.ஆர்.டி. தனியார் ஹோட்டலில் வணிக ஆலோசனைக் கூட்டம் நடத்தியது.

இதில் பேக்வோலோடர் வாகனங்களை ஹைட்ராலிக் இயந்திர ஓட்டுநர்களுக்கு மானிய விலையில் பெற்றுத் தருவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பிரீத் நிறுவன மேனேஜிங் டைரக்டர் கே.ஆர்.சுப்பிரமணியன், ஆப்ரேட்டர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் சாமிசெல்வமூர்த்தி, மாநில அமைப்புச் செயலாளர் சேலம் சரவணன், மாநில செய்தி தொடர்பாளர் சேலம் கார்த்திக் மாநில செயற்குழு பொதுக்குழு உறுப்பினர் கலாம் சல்மான், சேலம் மாவட்ட அலுவலக செயலாளர் பலராம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img