கோவை மாநகரப் பகுதியில், விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க மாநகர போக்குவரத்து பிரிவு போலீசார் பல்வேறு நட வடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
விபத்துகளில் அதிக அளவில் தலைக்காயம் ஏற்படுவதால் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது என்பதால் அனைவரையும் ஹெல் மெட் அணிய கூறி
வருகிறார்கள்.
ஹெல்மெட் அணியா விட்டால் ரூ. 1000 வரை அபராதம் விதிக்கப்படு கிறது.
இந்த நிலையில் ஹெல்மெட் அணியா விட்டால் தண்டனை அதே வேளையில் மோட்டார் சைக்கிள் களில் முன்னாள் அமர்ந்திருப்பவர்கள் மற்றும் பின்னால் அமர்ந் திருப்பவர்கள் ஆகிய இருவரும் ஹெல்மெட் அணிந்திருந்தால் அவர் களை ஊக்கு விக்கும் விதமாக, இன்று கோவை ரேஸ் கோர்ஸ் போக்கு வரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் அவிநாசி ரோட்டில் எம்ஜிஆர் சிலை அருகில் அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில்
பயணிக்கும் 2 நபர்களும் ஹெல்மெட் அணிந் திருந்தால் அவர்களுக்கு உடனடியாக 100 ரூபாய் மதிப்பில் டோக்கன் வழங்கி அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் சென்று அதற்கு பெட்ரோல் போட்டுக் கொள்ளலாம் என கூறினர்.
இதில் 50 வாகன ஓட்டிகள் பயன் பெற்றனர்.
ஹெல்மெட் அணி வதை ஊக்குவிக்கும் வகையில் விபத்தில் உயிர் இழப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் இந்த பரிசு வழங்கப்பட்டதாக போலீசார் கூறினர். தற்போது மோட்டார் சைக்கிள்களில் பயணிக் கும் இருவர் ஹெல் மெட் அணிந்து செல்வது அதிகரித்து வருவதாக போலீசார் கூறினர்.