சென்னையில் நடந்த, சுரங்க இயந்திரங்கள் உற்பத்தி நிறுவனங்களின் பங்குதாரர்கள் மத்தியில், இந்தியாவிற்கான முன் முயற்சிகள் குறித்து, நிலக்கரித்துறை செயலாளர் உரையாற்றினார்.
இந்திய நிலக்கரித்துறை செயலாளர் அம்ரித் லால் மீனா நேற்று முன்தினம் சென்னை, ஐடிசி கிராண்ட் சோழாவில் நடைபெற்ற, சுரங்க இயந்திரங்கள் உற்பத்திக்கான, மேக் இன் இந்தியா முயற்சிகள் குறித்த, நிறுவன பங்குதாரர்கள் கூட்டத்தில் உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “மேக் இன் இந்தியா என்பது வேலைவாய்ப்பை அதிகரிப்பது, திறன்களை மேம்படுத்துவது மற்றும் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான உலகளாவிய முன்னணி மையமாக உள்ளது
இது 3 முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளது.
உற்பத்தித் துறையின் வளர்ச்சி விகித த்தை ஆண்டுக்கு 12-14% ஆக உயர்த்துவது.
பொருளாதாரத்தில் 100 மில்லியன் கூடுதல் உற்பத்தி வேலைகளை உருவாக்குதல்
மொத்த உள்நாட்டு உற்பத்தியில், உற்பத்தித் துறையின் பங்களிப்பு அதிகரிப்பதை உறுதி செயதல்.
உயர் திறன் கொண்ட சுரங்க இயந்திரங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் வகையில், கோல் இந்தியா நிறுவனத்தின் தொழில்நுட்பத் துறை இயக்குநர் தலைமையில், ரயில்வே அமைச்சகம், கனரக தொழில்துறை அமைச்சகம், என்எல்சி ஐஎல், எஸ்சிசிஎல் என்டிபிசி, டபிள்யூபிபிடிசிஐஎல் மற்றும் உபகரணங்கள் உற்பத்தியாளர்கள் ஆகிய நிறுவனங்களின் உறுப்பினர்களை உள்ளட க்கிய, ஒரு பல்துறை ஒருங்கிணைப்புக் குழுவை நிலக்கரித்துறை அமைச்சகம் அமைத்திருந்தது” என்றார்.