ஐதராபாத்தை மைய மாகக் கொண்டு இயங்கி வரும் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனமான கிரீன்கோ குரூப், ஆரம்ப கட்டத்தி லேயே உள்நாட் டில் ஆபத்துக்கால ஆக்சிஜனை வழங்கும் நோக்கத்தோடு சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், உலக ளாவிய விநியோகச் சங்கிலி நெட்வொர்க்கிலிருந்து ஆபத்துக்கால ஆக்சி ஜன் செயல்பாட்டு அமைப் புகளை இந்தியாவுக்குக் கொண்டு வரும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா இரண்டாவது அலைக்கு எதிராக கடுமையாகப் போராடி வரும் நிலையில், இந்தியாவுக்கு உதவும் பொருட்டு நிமிடத்திற்கு 10 லிட்டர்கள் திறன் கொண்ட 200 மிகப்பெரிய மருத்துவ தரமுள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகளைக் கொண்டுவரும் ஐந்து சரக்கு விமானங்களில் முதலாவது விமானம் ஐதராபாத்தில் தரையிறங்கியது.
தெலங்கானா மாநில அரசின் சார்பாக, அம்மாநில அமைச்சர் கே.டி.ராமாராவ் மற்றும் தலைமைச் செயலாளர் சோமேஷ் குமார் ஆகியோர் இந்த விமானத்தை வர வேற்றனர். அப்போது, கிரீன் குழும இணை நிறுவனர்களான அனில் சலமலசெட்டி மற்றும் மகேஷ் கொல்லி ஆகியோர் விமானநிலையத்தில் உடன் இருந்தனர்.
கிரீன்கோ குரூப் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலர் அனில் சலமலசெட்டி கூறுகையில் “இன்னும் ஐந்து நாட்களில் ஐதராபாத், பெங்களூரு, டெல்லி விமான நிலையங்களில் மீதமுள்ள நான்கு சரக்கு விமானங்கள் 1,000 மிகப்பெரிய மருத்துவ தரமுள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகளுடன் தரையிறங்கும். இந்த ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஐசியூவுக்கு முந்தைய நிலை மற்றும் ஐசியூவுக்கு பிறகு நோயாளிகளின் நிலைத் தன்மை ஆகியவற்றில் நமது மருத்துவக் குழுவுக்கு உதவும் வகையில் பயன்படும்.
நோய்த் தொற்றுக்கு எதிராக போராடும் முயற்சிகளுக்கு உதவி செய்து, இந்தியா மீண்டும் இயல்பாக இயங்குவதற்கான எங்க ளது முயற்சிகளைத் தொடர்வோம்“ என்று தெரிவித்தார்.
கிரீன்கோ நிறுவனர் களின் முயற்சிகளுக்கு அமைச்சர் கே.டி.ராமாராவ் நன்றி தெரிவித்தார்.