உலகின் மாபெரும் ஆபரண சில்லறை விற்பனை நிறுவனமான மலபார் கோல்டு – டைமண்ட்ஸ் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் நோக்கில் தனது பங்களிப்பாக 1,00,000 பேர்களுக்கான கோவிட்-19 தடுப்பூசியை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது.
தடுப்பூசிகள் எளிதில் கிடைக்க பெறாத இச்சூழ்நிலையில் இந்த நோய் தாக்கும் அபாயம் அதிகமாக உள்ள சமூகப் பிரிவினருக்கும், ஆபரணத் தொழிலாளர்கள், ஊழியர்கள், முதலீட்டாளர்கள், அவர்களது உறவினர்களை கொரோனாவில் இருந்து காப்பாற்ற இந்தத் தடுப்பூசி போடப்படும்.
இத்தடுப்பூசி நடவடிக்கைகளுக்கு ரூ.8 கோடியை எங்கள் நிறுவனம் ஒதுக்கியுள்ளது என்று மலபார் குழுமத்தின் சேர்மன் எம்.பி. அகமது தெரிவித்தார். மேலும், குழுமத்துடன் தொடர்புடைய குழுக்களின் உறுப்பினர்கள், கூட்டாளி கட்டமைப்பில் உள்ளவர்கள் மற்றும் சமூகத்தில் உள்ளோரின் உயிரைக் காக்கத் தன்னால் இயன்ற எல்லா வகையான முயற்சிகளையும் மலபார் குழுமம் எடுக்கும் என்றும் அவர் உறுதியளிக்கிறார்.
முன்னணி மருத்துவமனைகளில் பணிபுரியும் முன்களப் பணியாளர்களின் உதவியுடன் உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ள தடுப்பூசிகளை மக்களுக்குத் தரும், இந்த தடுப்பூசி முகாம்கள் எமது நிறுவனத்தின் வளாகங்களிலேயே நடத்தப்படும் என்றும் சேர்மன் எம்.பி. அகமது மேலும் தெரிவித்தார்.