நாமக்கல் மாவட்டத்தில் இருபத்தி எட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில் ஓட்டுனர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இரவு பகலாக சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
ஏப்ரல் -2ஆம் தேதி 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் தினம் கொண்டாடப்பட்டது.
இதை முன்னிட்டு மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த மருத்துவ உதவியாளர் மணிகண்டனுக்கு மாவட்ட ஆட்சியர் உமா நற்சான்றிதழ் பதக்கம் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்ச்சியில் 108 ஆம்புலன்ஸ் மண்டல மேலாளர் ஜெயக்குமார், மாவட்ட மேலாளர் அறிவுக்கரசு, அரசு மாவட்ட அலுவலர் சின்ன மணி மற்றும் மனோஜ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.