திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திரு விழாவை முன்னிட்டு கடந்த 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் இருந்து 108 ஆம்புலன்ஸ்கள் வரவ ழைக்கப்பட்டு சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப் பட்டன. அதன்படி, அட்வான்ஸ் லைப் சப் போர்ட் ஆம்புலன்ஸ் 5 உட்பட மொத்தம் 30 ஆம்புலன்ஸ்கள் பணியில் 24 மணி நேரமும் ஈடுபட்டன. மேலும், 15 இருசக்கர வாகன அவசரகால முதலுதவி வாகனங்கள் பணியில் ஈடுபட்டன.
அதேபோல், அண்ணாமலையார் கோயில் பிரகாரத்துக்குள் ஒரு சிறப்பு மருத்துவ குழு வும், அபய மண்டபம் அருகே 24 மணி நேரமும் இலவச அவசர சிகிச்சை மையமும் செயல்பட்டது. மேலும், கோயில் உட்பிரகாரம், வெளி பிரகாரம் மற்றும் கிரிவலப்பாதை மற்றும் தற்காலிக பஸ் நிலையங் களில் நிறுத்தப்பட்டது.
இந்த சிறப்பு முகாம் களில் தமிழகத்தின் பல் வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடு பட்டனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 1,098 பேர் பயன டைந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி தீபத் திருவிழாவின் போது சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும் பயனா ளிகள் நிறைந்த மனதுடன் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.