fbpx
Homeபிற செய்திகள்235 மாணவிகளுக்கு ரூ.20,19,000 மலபார் குழுமம் வழங்கியது

235 மாணவிகளுக்கு ரூ.20,19,000 மலபார் குழுமம் வழங்கியது

மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ்-ன் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு (CSR) நிகழ்ச்சி, கோயம்புத்தூர் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் கிளையின் சார்பாக நடைபெற்றது.

சிறப்பு அழைப்பா ளர்களாக கோயம்புத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட கல்வி துணை திட்ட ஒருங்கிணை ப்பாளர் இளமுருகன், குளத்துப் பாளையம், அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயபிரகாஷ், கிணத்துக் கடவு அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, மதுக்கரை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் (ஓய்வு) வேல்முருகன், வாகராயம் பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி தலை மை ஆசிரியர் பரிமளம் ஆகியோர் பங்கேற்றனர்.

அரசு பள்ளி மாணவி களின் நலனிற்காகவும் அவர்களின் கல்வியையும், வாழ்கைத் தரத்தையும் உயர்த்துவதற்காக கோவை மாவட்டத்தில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 235 மாணவிகளுக்கு சிஎஸ்ஆர்-ல் மலபார் குழுமம் சார்பாக மொத்தம் ரூ.20,19,000/- மதிப்பிலான காசோலையை வழங்கினார்.


மலபார் கோல்டு டைமண்ட்ஸ் தமிழ்நாடு மேற்கு மண்டலத் தலைவர் நௌசாத், மலபார் கோல்டு டைமண்ட்ஸ் கோவை கிளை வர்த்தக மேலாளர் தேவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தனது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி, சுற்றுச்சுழல் பாதுகாப்பு மற்றும் மகளிரை அதிகாரமயமாக்குதல் என சமூக பொறுப்பு திட்டங்களுக்கு மலபார் கோல்டு குழுமம் செலவு செய்கிறது.

படிக்க வேண்டும்

spot_img