fbpx
Homeபிற செய்திகள்கோவையில் 25 வது சந்தர் நினைவு கார் பந்தயம்

கோவையில் 25 வது சந்தர் நினைவு கார் பந்தயம்

கோவையில் 25 வது சந்தர் நினைவு கார் பந்தயம் வெள்ளி விழா ஆண்டையொட்டி 2 – நாள் போட்டியாக நடைபெறுகிறது.

இது குறித்து எம்.கே. சந்தர் நினைவு அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் வி.கே. ராஜகோபால் கூறியதாவது:- இந்த கார் பந்தயம் வருகிற 11- ந் தேதி காலை 8.30 மணிக்கு கோவை காஸ்மோபாலிடன் கிளப்பில் இருந்து புறப்படுகிறது. அப்போது மாவட்ட ஆட்சி தலைவர் கிராந்தி குமார் பாடி கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். பந்தய தூரம் 340 கி.மீ. ஆகும்.
இதில் 50 கார்கள் பங்கேற்கின்றன.

இந்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.1 லட்சம், 2 -வது பரிசு ரூ.50,000 3-வது பரிசு ரூ.25 ஆயிரம் ரொக்க பரிசுகள் வழக்கப்படுகிறது
இதன் பரிசளிப்பு விழா 12 -ந் தேதி மாலை 6 – 30 மணிக்கு காஸ்மாபாலிடன் கிளப்பில் நடக்கிறது. விழாவில் போலீஸ் முன்னாள் டி.ஜி.பி. ஏ.கே.விஸ்வநாதன் எப் ஒன் கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கார் பந்தய வீரர்களுக்கு பரிசு கோப்பையும் பணமுடிப்பும் வழங்குகிறார்கள்.

இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கி ணைப்பாளர்கள் பிரிதிவிராஜ் சந்திரசேகர், விஜயகுமார், பாலமுருகன் ராமசாமி ஆகியோர் செய்து வருகிறார்கள்
மேற்கண்டவாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img