fbpx
Homeபிற செய்திகள்கோவையில் வரும் 26ம் தேதி இளம் கிறிஸ்தவ மகளிர் சங்க கூட்டம்: லீமா ரோஸ் மார்டின்...

கோவையில் வரும் 26ம் தேதி இளம் கிறிஸ்தவ மகளிர் சங்க கூட்டம்: லீமா ரோஸ் மார்டின் சிறப்புரை

கோயமுத்தூர், இளம் கிறிஸ்தவ மகளிர் சங்கம் சார்பில் அவிநாசி சாலையில் உள்ள ஒய்டபிள்யூசிஏ கட்டிடத்தில் வரும் 26ம் தேதி மாலை 5 மணி அளவில் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில் மார்டின் குரூப் இயக்குநரும் மார்டின் ஓமியோபதி கல்லூரி தாளாளருமான டாக்டர் லீமா ரோஸ் மார்டின் முதன்மை விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

பரிசளிப்பு விழா, கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெறும் இந்த விழாவில் அனைவரும் குடும்பத்தோடும் நண்பர்களோடும் கலந்து கொள்ளுமாறு இளம் கிறிஸ்தவ மகளிர் சங்க தலைவர் செல்வி நிர்மலா சேகர் கேட்டுக்கொண்டுள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img