fbpx
Homeபிற செய்திகள்27 புதிய ரகங்களை உருவாக்கியவர்: கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்திற்கு முதல்பெண் இயக்குனர் நியமனம்

27 புதிய ரகங்களை உருவாக்கியவர்: கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்திற்கு முதல்பெண் இயக்குனர் நியமனம்

கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் இயக்குனராக முனைவர் கோ. ஹேமப் பிரபா பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதுதில்லியில் உள்ள வேளாண் விஞ்ஞானிகள் தேர்வு வாரியத்தின் (AGRICULTURAL SCIENTISTS RECRUITMENT BOARD) பரிந்துரையின் பேரில், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர், பயிர் பெருக்கத்துறை விஞ்ஞானியான இவரை, வரும் 2024 வரை நிறுவனத்தின் இயக்குநராக நியமித்தார்.

111 ஆண்டுகள் பழமை வாய்ந்த கரும்பு இனப் பெருக்கு நிறுவனத்தின் முதல் பெண் இயக்குனர், முனைவர் கோ. ஹேமப்பிரபா ஆவார். இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட ‘கோ’ (கோயம்புத்தூர்) ரகங்கள், நாட்டில் கரும்பு பயிரிடப்படும் நிலப்பரப்பில் 78 சதவீதத்திற்கும் மேல் ஆக்கிரமித்துள்ளன.

கரும்பு மரபணு முன்னேற்றத்தில் 34 ஆண்டுகளுக்கும் மேலான ஆராய்ச்சி அனுபவம் பெற்ற முனைவர் ஹேமப்பிரபா இதுவரை 27 கரும்பு ரகங்களை உருவாக்கி உள்ளார் . வட இந்தியாவில் கரும்பு சாகுபடியில் புரட்சியை ஏற்படுத்திய கோ 0238 இரகமும் தென்னிந்தியாவிற்கான சமீபத்திய குறுகிய கால ரகமான கோ 11015 ரகமும், இவற்றில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

350-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ள முனைவர் ஹேமப்பிரபா, கரும்பு ஆராய்ச்சிக்காக பல்வேறு விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றவர்.

படிக்க வேண்டும்

spot_img