fbpx
Homeதலையங்கம்38 பேருக்கு தூக்கு - சரியான தண்டனை!

38 பேருக்கு தூக்கு – சரியான தண்டனை!

56 பேரை பலி வாங்கிய அகமதாபாத் குண்டு வெடிப்பு வழக்கில் 38 பேருக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது சிறப்பு நீதிமன்றம்.

குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் 2008ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. 70 நிமிடங்களில் 21 குண்டுகள் பரவலாக வெடித்தன. இதில் 56 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இதற்கு இந்திய முஜாஹிதீன், ஹர்கத் – உல் – ஜிஹாத் – அல் – இஸ்லாமி ஆகிய தீவிரவாத அமைப்புகள் பொறுப்பேற்றிருந்தன. இந்த பரபரப்பான வழக்கில் 14 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட 49 பேரில் 38 பேருக்குத் தூக்கு தண்டனையும் 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.பட்டேல் தீர்ப்பு கூறி இருக்கிறார்.

இந்த குண்டுவெடிப்புகளில் இறந்தவர் களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தர விட்டுள்ளார்.

சரியான தீர்ப்பு!

படிக்க வேண்டும்

spot_img