fbpx
Homeபிற செய்திகள்4 பேருக்கு பணி நியமன ஆணைகள்: கிருஷ்ணகிரி கலெக்டர் வழங்கினார்

4 பேருக்கு பணி நியமன ஆணைகள்: கிருஷ்ணகிரி கலெக்டர் வழங்கினார்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருணை அடிப்படையில் 4 பேருக்கு பணி நியமன ஆணையினை கலெக்டர் வழங்கினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றி பணிகாலத்தில் மரணமடைந்த அலுவலர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்து, மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத் துராஜ் அலகு, பர்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி பணியிடைக்காலமான சண்முகம் என்பவரது மகனும், வாரிசுதாரருமான விமல்ராஜ் என்பவருக்கு கல்வித்தகுதியின் அடிப் படை, கருணை அடிப்படையில் வளர்ச்சிப்பிரிவில் இளநிலை உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணையினை வழங்கினார்.
இதே போல், உதவி இயக்குநர் (தணிக்கை) அலுவலகத்தில் கண்காணிப்பாளர்,

வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி இறந்த தீர்த்தகிரி என்பவரது மகனும், வாரிசுதாரருமான சீனிவாசன் என்பவருக்கு, கல்வித்தகுதி மற்றும் கருணை அடிப்படையில் உதவி இயக்குநர் (தணிக்கை) அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகவும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
மேலும், வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியம் பில்லனகுப்பம் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் 19ம் தேதி பணியிடைக்காலமான சுப்பிரமணி என்பவரது மகளும், வாரிசுதாரருமான வள்ளி என்பவருக்கு கல்வி தகுதி, கருணை அடிப்படையில் வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் இளநிலை உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதே போல்,

மாவட்ட கலெக்டர் அலுவலகம் சத்துணவுப் பிரிவு ஜீப் ஓடடுநராக பணிபுரிந்து ராஜேந்திரன் என்பரவது மகனும், வாரிசுதாரருமான ராகேஷ்கணபதி என்பவருக்கு கல்வி தகுதி மற்றும் கருணை அடிப்படையில் வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் இளநிலை உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இவ்வாறு மொத்தம் 4 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கி, பணிகாலத்தில் சிறப்பாக பணியாற்ற அறிவுரை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img