fbpx
Homeபிற செய்திகள்சிறுநீரக தானம் வேண்டி 40 ஆயிரம் பேர் பதிவு: அபிராமி கிட்னி கேர் தலைவர் சரவணன்...

சிறுநீரக தானம் வேண்டி 40 ஆயிரம் பேர் பதிவு: அபிராமி கிட்னி கேர் தலைவர் சரவணன் தகவல்

தமிழக முழுவதும் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட சுமார் 40 ஆயிரம் பேர் மாற்று சிறுநீரகம் தானமாக பெற தமிழ் நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையத்தில் பதிவு செய்துள்ளனர் என்று ஈரோடு அபிராமி கிட்னி கேர் தலைவர் டாக்டர் சரவணன் கூறினார்.

உலக கிட்னி தினத்தை முன்னிட்டு உடல் உறுப்பு தானம் செய்த நான்கு பேர்களுக்கு மருத்துவ மனையில் பாராட்டு கேட யத்தை அவர் ஆணை யத்தின் சார்பில் வழங்கி னார். நிகழ்ச்சியில் டாக்டர் சரவணன் கூறியதாவது: முன்னேறிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் சிறுநீரக தானம் பெறுவது சிரமமாக உள்ளது. இந்தியாவில் 80 சதவீதம் உறவினர்கள் மூலம் 20% மூளைச்சாவடைந்தவர்கள் மூலம் சிறுநீரகம் பெறப்படுகிறது.

இது முன்னேறிய நாடுகளில் தலைகீழாக உள்ளது. ஆனால் உடல் உறுப்பு தானம் வழங்கு வதில் தமிழகம் இந்தியாவிலேயே கடந்த ஆறு ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது. உடல் உறுப்பு தானம் வழங்குவது சம்பந்தமாக மேலும் விழிப்புணர்வு தேவை சிறுநீரகம் சர்க் கரை மற்றும் ரத்த கொதிப்பு நோய் சம்பந்தப்பட்ட இலவச பரிசோதனை மையத்தை தனது அபிராமி கிட்னி கேர் விரைவில் கோபியில் துவக்க உள்ளது இந்நிகழ்ச்சியில் நான்கு உடல் உறுப்பு தானம் செய்த குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனை மற்றும் ரெட் கிராஸ் சொசை ட்டி சார்பில் பாராட்ட ப்பட்டனர்.

நிகழ்ச்சியில் ஈரோடு ரெட் கிராஸ் சொசைட்டி தலைவர் டாக்டர் டி ஜி ராமமூர்த்தி அபிராமி கிட்னி கேர் தலைவர் தங்கவேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img