fbpx
Homeபிற செய்திகள்42ம் ஆண்டு துவக்க விழா: தர்மபுரியில் பாஜக கொடியேற்றம்

42ம் ஆண்டு துவக்க விழா: தர்மபுரியில் பாஜக கொடியேற்றம்

பாரதிய ஜனதா கட்சி யின் 42வது ஆண்டு துவக்க விழாவையொட்டி, தர்மபுரி நகரத்தில் பார திபுரம் 60அடி ரோடு, பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட அலுவலகம், மற்றும் புரோக்கர் அலு வலகம் ஆகிய இடங்களில் கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கட்சி யின் 42வது ஆண்டு துவக்க விழாவை யொட்டி டெல்லியில் பிரதமர் மோடி ஆற்றிய உரை, கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் நரேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கொடியேற்றி வைத்தார்.

மேலும் மாவட்ட தலைவர் பாஸ்கர், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஐஸ்வர்யம் முருகன், வெங்கட்ராஜ் மற்றும் பிரவீன் மாவட்ட பொருளாளர் சிவக்குமார், மாவட்ட துணை தலைவர்கள், மண்டல தலைவர்கள் மற்றும் மக ளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img