fbpx
Homeபிற செய்திகள்5 புதிய ஸ்மார்ட் போன்கள் சாம்சங் அறிமுகம்

5 புதிய ஸ்மார்ட் போன்கள் சாம்சங் அறிமுகம்

இந்தியாவின் அதிக நம்பகத் தன்மை கொண்ட ஸ்மார்ட்ஃபோன் பிராண்டான சாம்சங் ஐந்து புதிய மாடல்களை (கேலக்ஸி ஏ13/ஏ23/ஏ33 5ஜி/ஏ53 5ஜி/ஏ73 5ஜி)அறிமுகப்படுத்தி உள்ளது.

ஸ்டைலிஷ் மற்றும் நீடித்த ஆயுள் வடிவமைப்புடன், புத்துணர்வு தரும் புதிய வண்ணங்கள் மற்றும் ஃப்ளாக்ஷிப் போன்ற அம்சங்களுடன் கேலக்ஸி ஏ சீரிஸ் சீரமைக்கப்பட்டுள்ளது.

ப்ளாக்ஷிப் லெவல் 108 எம்பி கேமரா, ஆபிடிகல் இமேஜ் ஸ்டபிலைசேஷன் (ஓஐஎஸ்), மேம்பட்ட ஆயுள், தண்ணீர் மற்றும் தூசு எதிர்ப்புக்கான ஐபி67 தர மதிப்பீடு, ஆற்றல்மிகு ஸ்நாப்டிராகன் 778ஜி 5ஜி புராசஸர் மற்றும் சூப்பர் அமோலெட்+ டிஸ்ப்ளே, 120 ஹெச்இசட் ரெப்ரெஷ் விகிதம் ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டது கேலக்ஸி ஏ73 5ஜி.

சாம்சங்க் மொபைல்ஸ், இந்தியாவுக்கான சில்லரை வணிகம், சந்தையியல் பிரிவு தலைவர் மஹேஷ் ஆலந்தட் கூறுகையில் ‘ஸ்டைல், ஆற்றல், பல்துறை சிறப்புகள் ஆகியவை மூலம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஐந்து புதிய மாடல்களை கேலக்ஸி அறிமுகப்படுத்தி உள்ளது.

கேலக்ஸி ஏ73 5ஜி சம்மந்தப்பட்ட பிரிவில் 108 எம்பி ஓஐஎஸ் கேமரா, ஆப்ஜெக்ட் எரேசர், ஏஐ ஃபோடோ ரீமாஸ்டர், ஃப்ளூயிட் ஸ்மூத் 120 ஹெச்இசட்சூப்பர் அமோலெட்+ டிஸ்ப்ளே, தண்ணீர், தூசு எதிர்ப்புத் திறன் ஆகிய இணையற்ற அம்சங்களுடன், ஈடற்ற அனுபவத்தை வழங்கும்’ என்றார்.

புதிய கேலக்ஸி ஏ53 5ஜி, கேலக்ஸி ஏ33 5ஜி, கேலக்ஸி ஏ23 மற்றும் கேலக்ஸி ஏ13 ஆகியவை பீச், ப்ளூ, பிளாக் மற்றும் வொயிட் ஆகிய நான்குஅசத்தல் வண்ணங்களில் கிடைக்கும். கேலக்ஸி ஏ53 5ஜி ஸ்மார்ட்ஃபோன் 6ஜிபி + 128 ஜிபி ரூ 34499/-க்கும், 8ஜிபி + 128 ஜிபி ரூ 35999/-க்கும் கிடைக்கும்.

கேலக்ஸி ஏ23 ஸ்மார்ட்ஃபோன் 6ஜிபி + 128 ஜிபி ரூ 19499/- மற்றும் 8ஜிபி + 128 ஜிபி ரூ 20999/- விலையில் கிடைக்கும். கேலக்ஸி ஏ13 4ஜிபி + 64ஜிபி ரூ 14999/-க்கும், 4ஜிபி + 128 ஜிபி ரூ 15999/-க்கும், 6ஜிபி +64ஜிபி ரூ 17499/- க்கும் கிடைக்கும்.

படிக்க வேண்டும்

spot_img