fbpx
Homeபிற செய்திகள்5 மாதங்களில் காவிரி கொள்ளிடம் வழியாக வீணாகக் கடலில் கலந்த 430 டி.எம்.சி. தண்ணீர்- பா.ம.க.தலைவர்...

5 மாதங்களில் காவிரி கொள்ளிடம் வழியாக வீணாகக் கடலில் கலந்த 430 டி.எம்.சி. தண்ணீர்- பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் வேதனை

கடலூர் மாவட்டம் சோழர் நீர் பாசன திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. 2-வது நாள் நடைபயணத்தை அரியலூரில் தொடங்கினார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலுக்கு வந்து பயணத்தை நிறைவு செய்தார். கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பளித்தனர். சோழர் நீர் பாசன திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி பொதுக்கூட்டம் சீரணி அரங்கம் அருகில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் செல்வ. மகேஷ் தலைமை தாங்கினார்.
வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா. அருள்மொழி, மாவட்ட தலைவர் தேவதாஸ் படையாண்டவர், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் பாஸ்கர், மாவட்ட துணைச் செயலாளர் கலைக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்காக நடைபயணம் மேற்கொண்டு வந்தேன். இங்கு வந்தது அரசியலுக்காக அல்ல. ஓட்டுக்காகவும் அல்ல.

சோழ மன்னர் நமக்கு கொடுத்த சொத்தை மீட்டு எடுப்பதற்காக. சோழ நீர்ப்பாசனத்தை அரசு நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும், சோழ மன்னர் கொடுத்த சொத்தை மீட்டு எடுப்பதற்காகவும் இந்த பயணத்தை தொடங்கி உள்ளேன்.

இதை அரசு நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி அனைத்து தரப்பு மக்களாலும் ஆதரிக்கப்பட்டு வருகிறது. தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் கடந்த 59 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்தும் மக்களுக்கு பயனுள்ளதாக அமையவில்லை.

ஆதலால் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி அமைத்ததும் 2 ஆண்டுகளில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செய்து தருவேன்.
காவிரியில் 70 இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும். காவேரி கொள்ளிடம் ஆற்றில் இருந்து நமக்கு தேவையான நீரை பெற்றுக் கொள்ளலாம்.

கடந்த 5 மாதங்களில் 430 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்து உள்ளது வேதனை அளிக்கிறது. இதை தடுக்க தடுப்பணைகள் கட்ட வேண்டும்.
விரைவில் வீராணம் ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்வேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

விருத்தாச்சலம் முன்னாள் சட்டமன்ற முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் கோவிந்தசாமி, முன்னாள் ஒன்றிய குழுத் தலைவர் தாமரைக்கண்ணன், ஒன்றியச் செயலாளர் ராஜேஷ், தவசீலன் அன்பரசன், பார்த்திபன் மாவட்ட செயலாளர்கள் கார்த்திகேயன், முத்துகிருஷ்ணன், ரவிச்சந்திரன், பசுமை தாயகம் அன்புச்செழியன் உள்பட நிர்வாகிகள் பேசினர்.

நகரச் செயலாளர் டாக்டர் அன்புச்சோழர் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img