சிவகங்கை மாவட்டம் கடந்த மூன்றாண்டுகளில் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் சிங்கம்புணரி தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 70 வளர்ச்சிப் பணிகள் ரூ.19.42 கோடி மதிப்பீட்டில் மேற் கொள்ளப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் (2024-25) சிங்கம்புணரி பேரூ ராட்சி பகுதிகளில் ரூ.23.96 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் 20 வளர்ச்சித் திட் டப்பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் ஆய்வு மேற்கொண்டு கூறுகையில்,
“தமிழ்நாடு முதல மைச்சர் பொதுமக்களின் நலனைக்கருத்தில்கொண்டு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அறிவித்து, அதனை சிறப் பாக செயல்படுத்தி வருகி றார்கள். சிங்கம்புணரி தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2024-2025 நடப்பாண்டில் மொத்தம் 20 வளர்ச்சிப் பணிகள் ரூ.23.96 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் குடிநீர் மேம்பாட்டு பணி கள் ரூ.20.98 கோடி மதிப் பீட்டிலும், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஊரணி மேம்பாட்டு பணிகள் என மொத்தம் 2 பணிகள் ரூ.01.17 கோடி மதிப்பீட்டிலும், தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் வளமீட்பு பூங்காவில் மேம்பாட்டு பணி ரூ.0.12 கோடி மதிப்பீட்டிலும், 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் போர் வெல், வடிகாலுடன் கூடிய சிறுபாலம் மற்றும் மயானத்திற்கான சுற் றுச்சுவர் அமைக்கும் பணிகள் என மொத்தம் 07 பணிகள் ரூ.0.53 கோடி மதிப்பீட்டிலும், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கலையரங்கம் மற்றும் நிழற்குடை அமைக்கும் பணிகள் என மொத்தம் 3 பணிகள் ரூ.0.25 கோடி மதிப்பீட்டிலும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் வடிகாலுடன் கூடிய சிறுபாலம் மற்றும் போர்வெல் அமைக்கும் பணிகள் என மொத்தம் 4 பணிகள் ரூ.0.20 கோடி மதிப்பீட்டிலும், நூலக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நூலக கட்டிடம் அமைக்கும் பணி ரூ.0.22 கோடி மதிப் பீட்டிலும், இயக்கம் மற்றும் பராமரிப்பு திட்டத்தின் கீழ் பேருந்து நிலையம் மராமத்து பணி ரூ.0.49 கோடி மதிப்பீட்டிலும் என சிங்கம்புணரி தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடப்பாண்டில் மட்டும் ரூ.23.96 கோடி மதிப்பீட்டில் 20 வளர்ச்சி திட்டப்பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு நடைபெற்று பணிகள் தொடர்பாக கள ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு. பணிகளை, விரைந்து தரமான முறையில் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர, கடந்த மூன்றாண்டுகளில் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் மொத்தம் 70 வளர்ச்சிப் பணிகள் ரூ.19.42 கோடி மதிப்பீட்டில் சிங்கம்புணரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள் ளப்பட்டுள்ளது குறிப்பிட தக்கதாகும்.
இதுபோன்று, மாவட்டம் முழுவதும் அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் பொது மக்களுக்கு தேவையாக அனைத்து அடிப்படை வசதிகளும், அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்வதற்கான நட வடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வின் போது, தேவகோட்டைசார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம் பலமுத்து, பேரூராட்சி உதவி இயக்குநர் சத்திய மூர்த்தி, பேரூராட்சி துணைத் தலைவர் செந்தில்குமார், பேரூராட்சி செயல் அலு வலர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் ஜெயகிருஷ்ணன், உதவி பொறியாளர் அன்புசெல்வம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.