fbpx
Homeபிற செய்திகள்730 பேருக்கு ஆடைகள், இனிப்பு, காரம் வழங்கிய ஸ்ரீ ராமஜெயம் அறக்கட்டளை

730 பேருக்கு ஆடைகள், இனிப்பு, காரம் வழங்கிய ஸ்ரீ ராமஜெயம் அறக்கட்டளை

பொள்ளாச்சி குஞ்சிபாளையத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமஜெயம் அறக்கட்டளை கல்விச் சேவை, ஏழைகளுக்கு உணவு, ஆடைகள் போன்றவற்றை வழங்கி சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறது.

கடந்த தீபாவளியையொட்டி, ஸ்ரீராமஜெயம் அறக்கட்டளை பல்வேறு உதவிகளை பல தரப்பினருக்கும் வழங்கி சமூக சேவையில் ஈடுபட்டது. அதன்படி ஆனைமலை வாசவி மகாலில் நடந்த விழாவில் 210 மாற்றுத்திறனாளிகளுக்கு உடைகள் மற்றும் இனிப்பு, காரம் வழங்கப்பட்டது.

வால்பாறையில் வட்டாட்சியர் சுந்தர்ராஜ் தலைமையில் 200 மலைவாழ் குழந்தைகளுக்கு உடைகள், இனிப்பு, காரம் வழங்கினர்.

இதேபோல பொள்ளாச்சி பகுதியில் 40 குழந்தைகளுக்கும் பொள்ளாச்சி நகரில் 380 ஆதரவற்றவர்களுக்கும் உடைகள் மற்றும் இனிப்பு காரமும் அறக்கட்டளை சார்பில் வழங்கினர். பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 80 பேருக்கு செருப்பு மற்றும் பாய் விநியோகிக்கப்பட்டது.

பொள்ளாச்சி நகரில் ஏழ்மை நிலையில் உள்ள 20 குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளையும் ஸ்ரீராமஜெயம் அறக்கட்டளை வழங்கியது.

படிக்க வேண்டும்

spot_img