திருமண நிதியுதவியுடன் 8 கிராம் தங்க நாணயம் பெற்று பயனடைந்த மாற்றுத்திறனுடைய தம்பதியினர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு
மன நிறைவுடன் நன்றியினை தெரிவித்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அதில், குறிப்பாக மாற்றுத்திறனாளிகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, அத்துறையினுடைய பணிகளை, முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞரை போல், தன் பொறுப்பில் வைத்து, மாற்றுத் திறன் கொண்டவர்களின் மறு வாழ்விற்கென எண்ணற்ற திட் டங்களை வழங்கி, அவர்களின் நலன் காத்து வருகிறார்.
இதில், மாற்றுத்திறனாளிக ளுக்கு பயனுள்ள வகையில், நான்கு வகையான திருமண திட் டங்கள் தமிழக அரசால் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.
அதில், கை, கால் பாதிக்கப்பட்ட இயக்கத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளியை நல்ல நிலையிலுள்ள உள்ளவர் திரு மணம் செய்து கொள்ளும் திட்டம், செவித்திறன் பாதிக்கப்பட்டவரை நல்ல நிலையில் உள்ளவர் திருமணம் செய்து கொள்ளும் திட்டம், பார்வையற்றோரை நல்ல நிலையில் உள்ளவர் திருமணம் செய்து கொள்ளும் திட்டம் மற்றும் மாற்றுத்திறனாளியை மாற்றுத்திறனாளி திருமணம் செய்து கொள்ளும் திட்டம் ஆகியவைகளின் கீழ் பட்டப்படிப்பு படிக்காத மாற்றுத்திற னுடைய தம்பதியினருக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் திருமண உதவித்தொகையாக ரூ.25,000மும், பட்டப்படிப்பு படித்த மாற்றுத்திறனுடைய தம் பதியினருக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் திருமண உத வித்தொகையாக ரூ.50,000மும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் 2021-2022 நிதியாண்டு முதல் 2024&-2025 நிதியாண்டு வரை மொத்தம் 55 மாற்றுத்திறனுடைய தம்பதி யினருக்கு ரூ.21.50 லட்சம் மதிப்பீட்டிலான திருமண உத வித்தொகையுடன் 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டு பயன் பெற்றுள்ளனர்.
மாற்றுத்திறனுடைய தம் பதியினர் தினேஷ்குமார் மற்றும் புஷ்பம் ஆகியோர் திட்டப் பயன்கள் குறித்து கூறியதாவது:
தம்பதிகளாகிய நாங்கள் இருவருமே மாற்றுத்திறனாளிகள். நாங்கள் கீழப்பூங்குடி பகுதியைச் சார்ந்தவர்கள்.
நாங்கள் பட்டப்படிப்பு பயின்றுள்ளோம். தற்போது, காரைக்குடி பகுதியில் வசித்து கொண்டு, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து, அதன் மூலம் கிடைக்கப்பெறும் வருவாயின் வாயிலாகவே, எங் களது அடிப்படை தேவை களை பூர்த்தி செய்து வருகிறோம்.
மாற்றுத்திறனாளியான நாங்கள் இருவருமே எங்களது தேவைகள் மட்டுமன்றி, எங்களது பெற்றோர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டியது எங்களின் கடமையாகும்.
அதற்கு அடிப்படை யாக, தமிழ்நாடு முதல மைச்சர் ஆட்சியில் மாற்றுத் திறனாளிகளின் நலன் காக்கின்ற வகையில், எங்களுக்கான எண்ணற்ற நலத்திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல் படுத்தப்பட்ட வருகிறது. சமூகத்தில் மற்றவர்களுக்கு இணையாக நாங்கள் திகழ்ந்திடும் வகையிலும், மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பிறரைச் சார்ந்திருக்காமல், தன்சார்பு நிலையை அடைய வேண்டும் என்பதற்கான அடிப்படையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது எங்கைளைப் போன்ற மாற் றுத்திறனாளிகளுக்கு மிகுந்த மன நிறைவை அளிக்கிறது.
இவ்வாறாக, மாற்றுத்திறானிக ளின் பல்வேறு தேவைகளை நிறைவேற்றி வரும் தமிழக அரசு, திருமண நிதியுதவியும் வழங்கி எங்களின் நலன் காத்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நான்கு வகையான
திட்டங்களில், மாற்றுத்திறனாளியை மாற்றுத் திறனாளி மணக்கும் திருமண உதவித்தொகை திட்டத்தின் கீழ் நாங்கள் விண்ணப்பித்தோம்.
அத்திட்டத்தின் கீழ், எங்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ரூ.50,000 மதிப்பீட்டிலான நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக, கிடைக்கப்பெற்ற திருமண நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயம் ஆகியவைகள், தமிழ்நாடு முதலமைச்சர் எங்களது திருமணத்திற்கு பரிசாக அளித்ததாக மன மகிழ்ச்சி அடைகின்றோம். தற்போது, கிடைத்துள்ள நிதியுதவியானது, எங்களது வாழ்க்கை தர முன்னேற்றத்திற்கு அடிப்படையாகவும், பேருதவியா கவும் அமைந்துள்ளது.
இதுபோன்று, ஒவ்வொரு மாற்றுத்திறனாளியின் தேவை களை அறிந்து, அதற்கான திட்டங்களை தொலைநோக்கு சிந்தனையுடன் சிந்தித்து, எங்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகளின் நலனை பாதுகாத்து வரும் முதலமைச்சருக்கு அனைத்து மாற்றுத்திறனாளிகளின் சார்பிலும் மனநிறைவுடன் நன்றியினை தெரிவித்துக் கொள் கிறோம். இவ்வாறு கூறினர்.
தொகுப்பு
மு.ராஜசெல்வன்
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
சிவகங்கை மாவட்டம்.