fbpx
Homeபிற செய்திகள்அரசு மருத்துவமனைக்கு கோவில்கள் சார்பில் உணவுப் பொட்டலங்கள் விநியோகம்

அரசு மருத்துவமனைக்கு கோவில்கள் சார்பில் உணவுப் பொட்டலங்கள் விநியோகம்

முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், கொரோனா தடுப்பு பணியின் ஓர் அங்கமாக இந்து அறநிலையத் துறை சார்பில் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு தேக்கம்பட்டி பத்ரகாளியம்மன் கோவில், குறுந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோயில், அன்னூர் மண்ணீஸ்வரர் கோயில், மத்தம்பாளையம் கரணவிநாயகர் கோயில், வீரபாண்டி மாரியம்மன் கோயில், இடுகம்பாளையம், அனுமந்தராயன் கோயில் நிர்வாகம் மூலம் 400 உணவுபொட்டலங்கள் வழங்கப்பட்டது.

அவற்றை பயனாளிகளுக்கு வழங்கும் பொருட்டு திமுக மாநில செயற் குழு உறுப்பினர் டி.ஆர்.எஸ்.சண்முகசுந்தரம் தலைமையில் தலைமை மருத்துவர் கண்ணனிடம் கோவில் சூப்பிரண்டு சந்திரசேகர் வழங்கினார்.

நிகழ்வில் தெற்கு ஒன்றிய குழு உறுப்பினர் முனுசாமி, ஒன்றிய குழு பொறுப்பாளர்கள் ஆறுமுகம், மனோகரன், தனசேகரன், போல்சன், மூர்த்தி, கலிங்க கணேஷ், சசிதரன், ஹாஜஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img