fbpx
Homeபிற செய்திகள்டேன்டீ தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி

டேன்டீ தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி

நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சி அலுவலக கூட்டரங் கில், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந் திரன் தலைமையில், வனத்துறை சரக அலுவலர்கள் மற்றும் டேன் டீ அலுவலர்கள் ஆகியோரு டனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.


இந்த ஆய்வுக் கூட்டத்தில், டேன் டீ நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகள் பராமரித்தல், கழிப்பிட வசதியுடன் கூடிய குடியிருப்பு உடனடியாக ஏற்படுத்தி தருதல், தற்காலிக பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளுதல், தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை குறித்தும், தேயிலை ஒரு ஏக்கருக்கு எவ்வளவு உற்பத்தி என்பது குறித்தும், மொத்த உற்பத்தி விற்பனை குறித்தும், டேன் டீ நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலன்கருதி ஏற்படுத்தவுள்ள கொரோனா பாதுகாப்பு மையம் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.


மேலும் வன அலுவலர்களுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மனித – வனவிலங்கு மோதல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், வன விலங்குகள் விவசாய நிலங்களுக்கு வருவதை தடுக்க அமைக்கப்பட்ட அகழிகளை தூர்வாரும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், பார்த்தீனியம் உன்னி செடிகள் அகற்றுதல் குறித்தும், மசினகுடியில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை உள்ளூர் மக்களுக்கு போக்குவரத்துக்கு விதிவிலக்கு அளிப்பது குறித்தும், பழங்குடியின மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-நீலகிரி மாவட்டத் தின் பிரதான தொழிலான தேயிலை சாகுபடி மற்றும் தேயிலை அடிப்படை விலை குறித்து அலுவலர்களுடன் பேசி, இதுவரை போதிய இலாபம் இல்லாமல் இயங்கிய டேன்டீ தொழிற்சாலைகளை இலாபத்தை நோக்கி இயக்க நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் நமது மாவட்டத்தில் அடிக்கடி நிகழும் மனித விலங்குகள் மோதலை தடுக்க வனத்துறையின் மூலம் தொடர்ந்து, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பிரச்சனையினை தடுப்பதற்கு கூடுதல் நிதி தேவைப்படுகிறது. மனித விலங்குகள் மோதலினை தவிர்ப்பதற்காக முதலமைச்சரிடம் எடுத்துக் கூறி கூடுதலாக நிதி பெற்று இப்பிரச்சனை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.


நமது மாவட்டத்தில் வனப்பகுதியில் பழங்குடியினர் அதிகளவில் வசித்து வருகிறார்கள். குறிப்பாக முதுமலை பகுதியில் வசித்து வரும் மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, அய்யங்கொல்லி பகுதிக்கு இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டேன்டீ தொழிலாளர்களை நிரந்தர தொழிலாளர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.


இக்கூட்டத்தில், டேன்டீ நிர்வாக இயக்குநர் ஸ்ரீநிவாச ஆர்.ரெட்டி, கள இயக்குநர் (முதுமலை புலிகள் காப்பகம்) கௌசல், மாவட்ட வன அலுவலர் குருசாமி, மாவட்ட வன அலுவலர் (கூடலூர்) கொம்மு ஓம்காரம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மு.திராவிடமணி உட்பட வனத்துறையினர், டேன் டீ அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img