தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசை அவரது இல்லத்தில், விருதுநகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, தொழில்துறை சார்ந்தவர்களுடன் கலந்து பேசி எடுத்து வரும் நடவடிக்கைகள் நம்பிக்கை தருவதாக அமைச்சருக்கு மாணிக்கம் தாகூர் பாராட்டு தெரிவித்தார்.