fbpx
Homeபிற செய்திகள்இணைய தள வழியில் ஊட்டி மலர் கண்காட்சி

இணைய தள வழியில் ஊட்டி மலர் கண்காட்சி

நீலகிரியில், ஆண்டு தோறும் மே மாதம் நடைபெறும் கோடை விழாவின் ஒரு பகுதியாக, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. ‘கொரோனா’ தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், ஏப்., 20 ம் தேதி முதல், தாவரவியல் பூங்கா மூடப்பட்டது. ஆனால், தோட்டக்கலை துறை சார்பில், கடந்த, 6 மாதங்களாக, பூங்காவில் மலர் செடிகள் தயார்படுத்தும் பணி நடந்து வந்தது.

பூங்காவில், 52 பேரினங்கள் வகையை சேர்ந்த, 293 ரகங்களில், 5 லட்சம் மலர் செடிகள் தயார்படுத்தப்பட்டு, பூங்காவில் பூத்து குலுங்குகிறது.
இதில், பூங்கா மாடங்களில், 25 ஆயிரம் மலர் தொட்டிகளில், லில்லியம்ஸ், டேலியா, சால்வியா, டெல்பீனியம், டெய்சி, வயோலா, பிளாக்ஸ், வெர்பினா, ஆஸ்டர், ஸ்டாடீஸ், ஸ்டாக், பெட்டூனியா மேரிகோல்டு உள்ளிட்ட மலர் செடிகள். புதிய ரகங்களான கேலா லில்லி, லைமோனியம், கொடிஷியா, டொரினியா மலர்செடிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


ஆண்டு தோறும் முக்கிய வாசகத்தை பூங்கா மையப்பகுதியில் பல ஆயிரம் மலர்களால் வடிவமைத்து காட்சிப்படுத்துவது வழக்கம். நடப்பாண்டில், ‘கொரோனா’ பெருந்தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ‘கோவிட்-19’ தடுப்பூசி போடுங்கள் என்ற வாசகம் மலர் தொட்டிகளால் வடிவமைக்கப்பட்டது.


நடப்பாண்டு, மே 21 ம் தேதி இன்று துவங்க இருந்த மலர் கண்காட்சி ‘கொரோனா’ தொற்றால் நடத்தப்படவில்லை. இதனால், இன்று மலர் அலங்காரத்தினை பொதுமக்கள் இணைய தள வழியில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை, வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், கலெக்டர் இன்ன சென்ட் திவ்யா ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் தோட்டக்லை இணை இயக்குனர் சிவசுப்ரமணிய சாம்ராஜ், உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img