கோவையில், கடந்த 3 நாட்களில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த வழக்கறிஞர்கள் நான்கு பேர் உயிரிழந்தனர்.
நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்ததால், கடந்த 18 முதல் நீதிமன்ற பணிகள் முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டன. ஜாமீன் மனுக்கள் மீது மட்டும் வாரத்தில் ஒரு நாள், ஆன்லைன் வாயிலாக விசாரணை நடக்கிறது.
நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்துக்கு வராமல் இருந்த போதிலும் தொற்று பாதிப்பு குறையவில்லை.இதுவரை 80 க்கும் மேற்பட்ட ஊழியர்களும்,50 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களும் கொரோனா தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 20ம் தேதி கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சீனியர் வழக்கறிஞர் பழனிச்சாமி 79, உயிரிழந்தார்.
இந்நிலையில்,கடந்த 3 நாட்களில் மட்டும் 4 வழக்கறிஞர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.மேட்டுப்பாளையம் கிறிஸ்டோபர்,65, சுலோச்சனா,78, தாராபுரம் அய்யாசாமி,64, ஆர்.எஸ்.புரம் ராஜேந்திரன்,56, ஆகியோர் உயிரிழந்தனர்.