fbpx
Homeபிற செய்திகள்கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிராம மக்களுக்கு தினமும் கபசுர குடிநீர், கசாயம் வினியோகிக்கும் அறக்கட்டளை

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிராம மக்களுக்கு தினமும் கபசுர குடிநீர், கசாயம் வினியோகிக்கும் அறக்கட்டளை

திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் செம்பிய நல்லூர் ஊராட்சி வெள்ளி யம்பாளையம் கிராமத்தில் உள்ள மகாலட்சுமி நகரில் 500க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். அவிநாசி அரசு பொது மருத்துவமனை சித்த மருத்துவப்பிரிவு மற்றும் மகாகணபதி திருக் கோவில் டிரஸ்ட் சார் பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன.


அதன் படி பொதுமக்களுக்கு நில வேம்பு, கபசுர குடிநீர் மற்றும் மஞ்சள், இஞ்சி, எலுமிச்சை கலந்த கசாயம் கடந்த 30ம் தேதி முதல் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.


முதல்நாள் நிகழ்ச்சிக்கு அரசு சித்த மருத்துவர் மாலதி, சித்த மருத்துவப்பிரிவு மருந்தா ளுநர் சரவணன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். பொதுமக்களுக்கு வீதிதோறும் மாஸ்க் அணிந்தபடி சென்று மகா கணபதி திருக்கோயில் டிரஸ்ட் நிர்வாகிகள் கசா யம் வழங்கினர்.

இந்த நிகழ்வுக்கு தேவை யான உதவிகளை டிரஸ்ட் நிர்வாகிகள் காளிமுத்து, ராமமூர்த்தி, விஷ்ணு, இளையராஜா, ராஜன், கணேசன், சக்திவேல், கருப்பசாமி, ஸ்ரீனிவாசன், சதீஸ், முருகன், முருகராஜ், விவேக், அருள்குமார், ஜீவா ஆகியோர் செய்து கொடுத்தனர்.


தனி மனித இடைவெளி யுடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. தினமும் தொடர்ந்து நிலவேம்பு, கபசுர குடிநீர் மற்றும் கசாயம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img