fbpx
Homeபிற செய்திகள்கொரோனா நோயாளிகளுக்காக 100 போர்வைகள் வழங்கிய கேத்தி சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி

கொரோனா நோயாளிகளுக்காக 100 போர்வைகள் வழங்கிய கேத்தி சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி

கோவை சி.எஸ்.ஜ பிஷப் திமோத்தி ரவீந்தர் மற்றும் கேத்தி சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி தாளாளர் சுதன் அப்பாதுரை ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, கேத்தி சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரி உன்னத் பாரத் அபியான் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் கோவிட் கேர் சென்டர்களில் பயன்படுத்துவதற்காக ரூ.25 ஆயிரம் மதிப்பிலான 100 போர்வைகள் மற்றும் தலையணை உறைகள் வழங்கப்பட்டது. அவற்றை கல்லூரி முதல்வர் ஜோஷுவா ஞானசேகரன் முன்னிலையில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மற்றும் உன்னத் பாரத் அபியான் திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரதாப் ஆகியோர் குன்னூர் வட்டாட்சியர் சீனிவாசனிடம் ஒப்படைத்தனர்.

படிக்க வேண்டும்

spot_img