டிசிஐ குழுமம் எப்போதுமே அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுடன் பல ஆண்டுகளாக வலுவான தொடர்பைப் பகிர்ந்து கொண்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலையை அடுத்து, டிசிஐ குழுமம், அந்தமான் & நிக்கோபார் மக்களுக்கு தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
டிசிஐ, அதன் பிரிவு டிசிஐ சீவேய்ஸ் மற்றும் அதன் சிஎஸ்ஆர் பிரிவு டிசிஐ பவுண்டேஷன் ஆகியவை மக்களின் சேவைக்காக 10 லிட்டர் திறன்கொண்ட 150 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை நன்கொடையாக அளித்துள்ளன.
ஐஏஎஸ் அதிகாரிகளான துணை ஆணையர் மற்றும் நோடல் அதிகாரி சுனில் அஞ்சிபக்கா, கூடுதல் மாவட்ட நீதிபதி ஹரி கல்லிக்கட், உதவி ஆணையர் யசஸ்வானி ஆகியோர் முன்னிலையில் ஆக்சிஜன் செறிசெறிவூட்டிகள் ஒப்படைக்கப்பட்டன.
தலைமைச் செயலாளர், துணை ஆணையர் சுனில் அஞ்சிபக்கா மற்றும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் டிசிஐ சீவேய்ஸின் துணைத்தலைவர் பி.கே.கவுஷிக் நன்றி தெரிவித்துள்ளார்.